Vaasi Yogam. சிவசித்தனின் வான்வாசி “வாசியே சுவையே”

சிவசித்தனின் வான்வாசி 

SSG - 151

வாசியே சுவையே

என்சிவசித்தன் கழிவகற்ற பிறப்பின் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் வாசியாலே உண்மையின் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் எழுத்தறிவிக்க  தமிழின்  சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் பேசுகையில் அவன் சொல்லின் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் அவன் மொழியில் எளிமை சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் நெருப்பதிலே  வெப்ப  சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் வாசத்திலே வாசத்தின் சுவை  உணர்ந்தேனே
என்சிவசித்தன் தன்மையிலே நிலையான சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் கண்களிலே ஒளியின் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் எழுத்திலே அனைவரும் ஒன்றென்ற சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் பாட்டிலே ஒருசொல் பல்சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் செயலிலே வேகச் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் யோகமதில் நாவிலே அமுத சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் பேரறிவில் எனக்கோர் சிற்றிடச் சுவை கண்டு உணர்ந்தேனே
என்சிவசித்தன் அழகாலே நான் அழாகாகும் சுவை உணர்ந்தேனே
*******************************************************************
என்சிவசித்தன் சூட்சுமங்கள் எனைக் காக்கும் சுவை உணர்ந்தேனே
*******************************************************************
என்சிவசித்தன் சொல்லதிலே சூட்சுமச் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் ஆன்மமதில் என்ஆன்ம சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் கூடலிலே உயிரின் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் எண்ணத்திலே அன்பின் சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் ஆற்றலிலே செம்மை சுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் பேரொளியில் பிரபஞ்சசுவை உணர்ந்தேனே
என்சிவசித்தன் நினைக்கையிலே என்கண்ணீரின் சுவை உணர்ந்தேனே..
————————என் முழுதும் நிறைந்தவனை

என் கண்ணில் குளிர் தந்து நிலைக்கச் செய்வேன் என்றும் சுவையது என்சிவசித்தனே..

 


 

என்அவன்அன்பாலே…

 

எ(இ)ன்றும்
எண்ணங்கள்
எழுத்துகள்
என்னுள்ளே
எழவே
என்னவன்
எண்ணமது
எண்ணிறந்த
எழுத்தாய்
எதிரொலிக்க
என்னெதிரே
எதிர்ப்பட்டு
என்பாடல்கேட்டு
எதிர்காற்றாய்
எல்லைகாட்டி
எளிதாய் மீண்டும்
என்னுள் புகுந்தானே
என்னிறைவனே..
என்அவன்அன்பாலே…
என்பாடல்கேட்டானே…

 

 

 

Leave a Reply