Vaasi Yogam. சிவகுரு மந்திரந்தனை அகத்தால் மெருகேற்று…

 சிவகுருவே சரணம்!

 சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 – பாடல் 01

SSG - 301

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

 

காலையிலும் மாலையிலும்
காலை உள்ளேற்றி!
கழிவுகளை வெளியேற்றி!
சிவகுரு வகுத்த உணவுமுறை பின்பற்றி!
ஒன்றரை மணிக்கு ஒருமுறை நீர் உள்ளூற்றி!
தவறாது சிவசித்த மந்திரந்தனை அகத்தால் மெருகேற்றி!
நாளும் கணப்பொழுதும் நம் உடலின் உயிரைப் போற்றி!
வாழ்ந்திடுவோம் நோயின்றி!
வாழும் காலம் வரை

சிவசித்தனின் வான்வாசியின் ஆசியால்…


 

 

 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 – பாடல் 02

 

காலை தானே உணர்த்தும் காலநாதன் என் சிவசித்தனே…

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

அக்காலந்தொட்டு இக்காலம் வரை
எம் சிவசித்த வாசிக்காலை எவரேனும்
முக்காலம் அறியும் வண்ணம் எடுத்துரைத்தனரா?
தன் கால் கொண்டு தானே அறியும்
காலை அறிந்து உணர்ந்து
பிறருக்கு காலை தானே உணர்த்தியும்
தன் காலத்திற்குள் இக்காலை
காலத்தே உலகம் பரப்பிடவும்
வந்த காலநாதன் என்சிவசித்தனே!


 

 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 03

 

அணுவைப் பெருக்கி – பிணியைப் போக்கி – நல்வான்வாசியேற்று

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

சிந்தையில் தானே எழுந்த எண்ணத்தால்
தன் உண்மையின் உயரத்தால்
வாசி உமை வந்து சரணடைந்தது.
வந்ததை அடைக்காமல் தானே
வளர்த்து உடல் நிலைகள் அறிந்து
உண்மை மெய்ப்பொருள் உணர்ந்து
யாமே உண்மையாளன் எனக் காட்டி
அள்ளிக் கொடுத்து அணுவைப் பெருக்கி
பிணியைப் போக்கி – உண்மையை
எம்முள் உணர்த்தி – உலகம் உய்ய
இன்றும் உம்முள் நல்வான்வாசியேற்றி
உண்மை மேலும் உணர்ந்து
தென்தமிழை தரணியில் தழைத்திட
உண்மையாய் தர்மம் நிலைத்திட
அவதரித்த வாசியின் உண்மையான
உருவே எங்கள் சிவகுரு சிவசித்தனே!