Vaasi Yogam. கருத்திலே நிறைவான்

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 04

SSG - 490

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

காயமதில் காலை உள்ளேற்றி
மாயனின் கழிவை
ஐவகையில் வெளியேற்றி!
உண்மை யாதுமென உன்னுள்ளே
தானாய் உணர்வாய்
உண்மைக்கு உண்மையாய்
உன் உடம்பிற்கும் உண்மையாய்
உன் உடம்பின் உயிருக்கும் உண்மையாய்
எம் சிவகுரு சிவசித்தன் மும்மந்திரந்தனை
கலங்காது கண்ணிமையாது
வாயசையாது உள்மொழிந்ததுமே!
கருத்திலே நிறைவான்
காணக்கிடைக்காத ஜோதியனாய்
உன் நெற்றி மையமதில் – ஜதியில்லா
ஆட்டம் உன் உண்மை உடலில்
வான்வாசியின் துணையால் கிடைத்த
உன்னதக் காயமதிலே!


 

 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 05

 

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

நன்மை நாடி பாண்டிய நாடு வந்தேன்!
நாடி அறிந்து!
நாற்றங்களை வெளியேற்றி!
நற்கதி பின்பற்றச் செய்து!
நற்றமிழ் வான்வாசியால் பயிலச் செய்து!
நல்லவரோடு என்னையும் இணையப் பெற்றேன்!!
நாதனை என்னுள் உணரப் பெற்றேன்!
நர்த்தனமாட சிவசித்த மந்திரமுரைத்து
நல்லதோர் மருதில்லா மார்க்கத்தை
நயம்பட உணர்த்தி
நானிலம் போற்றும்படி
நன்மை பல செய்ய வைத்து – உண்மை
நல்கிட வாய்த்த
நாதனே! எம் சிவகுரு சிவசித்தனே!!!


 

 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 06

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

காயமதில் காலை உள்ளேற்றி
மாயனின் கழிவை
ஐவகையில் வெளியேற்றி!
உண்மை யாதுமென உன்னுள்ளே
தானாய் உணர்வாய்
உண்மைக்கு உண்மையாய்
உன் உடம்பிற்கும் உண்மையாய்
உன் உடம்பின் உயிருக்கும் உண்மையாய்
எம் சிவகுரு சிவசித்தன்‬ மும்மந்திரந்தனை
கலங்காது கண்ணிமையாது
வாயசையாது உள்மொழிந்ததுமே!
கருத்திலே நிறைவான்
காணக்கிடைக்காத ஜோதியனாய்
உன் நெற்றி மையமதில் – ஜதியில்லா
ஆட்டம் உன் உண்மை உடலில்
வான்வாசியின் துணையால் கிடைத்த
உன்னதக் காயமதிலே!

 


 

Leave a Reply