சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 07

SSG - 495

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

உணவல்லவே உயிரை வளர்ப்பது
உயிர் அது வளரும் உண்மையால்
உண்மை அது உணரப்படும்
உடல்கழிவின் வெளியேற்றத்தால்
கழிவின் வெளியேற்றம் சிவசித்தனின் வான்வாசியால் மட்டுமே!

சேர்த்து வைத்த பணமும்
சேர்த்துக் கொண்ட பந்தமும்
பெற்றெடுத்த பெற்றோரும்
பேர்வைத்த பெரியோரும்
கற்றுக் கொடுத்த ஆசிரியரும்
உண்மை என நான் தினமும் வழிபட்ட உருவமும்
உற்றாரும் உடன் பிறந்தோரும்
உணர்த்தவில்லை உண்மையை!!

உணர்ந்த உண்மையை என்னை
என்னுள் உணர்த்தி உண்மையை
தன்மூலமாக என்னுள் காட்டி
ஒழுக்க நெறியை வகுத்து என்னை
ஒளியூட்டிய உண்மை குருவே
சிவகுரு சிவசித்தனே சரணம்!!!!

 


 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 08

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,
தன்னொளியாய் நீ பார்
உன்னொளி அகத்துளே
அதுதானே மெய்யொளி!
உண்மை உணர இறுதிவரை
சிவசித்தனின் வான்வாசியே வழி!
இதைத் தவிர அண்டத்தில் இல்லை
வேறு வழி!
சரீரம் மெய்யானதும் நீ
உள்ளுரை சிவசித்தனின் தமிழ்
மந்திரத்தில் வாசிஒலி!
சிந்தை தெளிந்து
சர்ப்பம் நெளிந்திடும் உயிர்
உணர்ந்த உண்மை ஒளியால்!
சர்ப்பத்தை அறியாத சரீரம்
உயிர் இல்லாத ஜடமே!


 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 09

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

உன்னை அறியாமல்
உன்னுள்ளே புகுந்து – நீ
எண்ணும் தீய எண்ணத்தையும்
தீய தகாத உணவினையும்  உண்டு
உனக்குத் தெரியாமல் உன்னை
அழிக்க உன்னாலே வளர்க்கப்படும்
ஓர் உயிர் கருமருந்தாய் ….
காண முடியாத உணர முடியாத ஓர்
உள் உயிராய் தீய எண்ணமதை
உன்னுள்ளே வித்திடுமே!
அறுக்கும் கருமருந்தை
அழிக்கும் கருமருந்தை
அண்டவிடாது கருமருந்தை – எம்
சிவசித்தனின் சிரம் பட்டதுமே
சீற்றத்துடன் உண்மையாய்
வாசி உள் சென்றதுமே!

நம் எண்ணத்தை செயல்வடிவில்
நடைமுறைப்படுத்துவது நம்
உள் அகத்தின் உண்மையே!
உன் எண்ணம் உண்மையாயின் அது
அளவிலாது உன்னை நல்வழியில் வழிநடத்தும்
உன் எண்ணம் உண்மையாய் இல்லாவிடில்
அது உன்னையே அழிக்கும்.


 

Leave a Reply