சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 10

SSG - 506

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

கழிவோடு நீ சொன்ன பல

மந்திரங்கள் உன்னை மேம்படுத்தியதா?

உண்மையாய் நீ சொல்!

சிவசித்த வான்வாசியோகம் மூலம் கால்

கொண்டு கழிவகற்றி எம் சிவசித்த மந்திரந்தை

மும்முறை உன் உள் அகத்தில்

உரைக்க உறைந்திருந்த சர்ப்பமும்

உயிர் பெறுமே சத்தமில்லாத சங்கீதம்

உன் சித்தத்திலே!

தேவையா ஆலயம்?

உன் தேகமே ஆலயமாம்!

உன் உண்மைப் பரம்பொருளை எம் சிவசித்த வான்வாசியின்

மூலம் உன் உள்ளொளியாய்

உணர்வாய் ஆத்மநாதனின்

ஆரூத்ராதரிசனம், அண்டத்தின்

உண்மையை உன் பிண்டமதில்

ஆனந்தமாய் சிவப் பேரொளியாய் எம்

சிவசித்தனாய்! எண்ணிய கணப் பொழுதில்

திண்ணமாய் எழுந்தருளும் எம்

எண்ணத்தின் சுத்தன், செயலின் சிவசித்தன்.

சிவமாய் உள்ளுணர சீவனால் உணர்ந்திட்ட

சிவசித்தனே!

 


 

 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 11

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

உணவினால் வராது உணர்வு

உண்மை உணர்ந்தால் வருமே அக உணர்வு!

உணவால் தேங்கும் கழிவை

சிவசித்தனின் வான்வாசி மூலம் நீக்கு!

கழிவு நீங்க நீங்க கிடைக்கும்

உண்மையான மெய்யனின் காட்சி!

தமிழின் பெருமையுணர்ந்த சிவசித்த

மந்திரம் உரைத்ததுமே

பீறிட்டது உடலின் வெப்பம் – ஆனந்த களியாட்டம்!

சர்ப்பமாய் சீறியது உண்மையுடலில்

நிசப்தமான மௌன நிலை மெய்யறிவு!

உண்மை நிலை, கருவிழி நடுவில்

சிவந்திட்ட ஆனந்த வலி

அற்பனாய், உண்மை அர்த்தமாய்

ஓங்கார ரூபனாய், வெப்பத்தின்

தலைவனாய், சிவந்த முகத்தோடும்

குளிர்ந்த பார்வையோடும் தரிசனம் காட்டிய

தென்னவன் உண்மையாளன் எம்

ஒரே வாசித் தலைவன் சிவகுரு சிவசித்தன்…….

 


 

சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 12

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

பயத்தால் உருவாகி
காற்றால் பரவி
தவறான உணவால் வேரூன்றி
உனக்குள்ளே கருவாகி
உன்னாலே உண்ணப்பட்டு
உன் எண்ணத்தை தீயதாக்கி
உண்மையறியா மூடனாக்கி
மனிதன் எனும் நிலை தவறச் செய்து
உண்மையறியாது உன்னை மாளச் செய்யும்
தீயவன் உன் கருமருந்தே!
அத்தீயவனை கருவறுக்க
சுயம்புவாய் அவதரித்து
சூட்சுமங்கள் பல உணர்ந்து – உணர்த்தி
உண்மை உணர உன்னை வழிநடத்தி
யாதுமாய் நின்ற எம்
சிவகுரு சிவசித்தனின் வாவாசியை நாடு!
நற்கதியுற்று மனிதனின்
மகத்துவம் உணர்ந்து இயற்கை
இன்பம் சுவைத்து இனிதே
இரண்டறக் கலப்பாய்!
பரவொளிதனிலே வான்வாசியால்!


 

Leave a Reply