சிவசித்தனின் 1009 பாடல்கள் – 931 – 940

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

DSC02290

931. களங்கமில்லாத மாசின்மையற்ற உளமலத்தை போக்குகின்ற

நிர்மலமான நிர்மலனே ஓம் சிவய சிவசித்தனே!

 

932. அங்கம்சூழ்ந்த அற்புத உணர்வாம் ஆகாச உணர்வதன்

அறியச் செய்யும் அற்புதரே ஓம் சிவய சிவசித்தனே!

 

933. நல்வழிதாண்டியே சூட்சுமமாய் அமைந்திட்ட பத்தாம்வழியை

பகுத்தறியச் செய்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

934. நீதிநெறி தவறேனே ஒழுங்கீனம் மறந்தேனே மதிமழுங்கீனம்

மறந்தேநின்னால் சுடர்விட்டேனே ஓம் சிவய சிவசித்தனே!

 

935. நிலைத்தநின் திவ்யபார்வை கண்டேனே நீடித்தவாழ்வுதனை

அடைந்தேனே ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!

 

936. முற்றுப்பெற்றோமே மனத்தளர்ச்சிக்கு முடிவுநிலை பெற்றோமே

பெறாஇன்பம் பெற்றோமே ஓம் சிவய சிவசித்தனே!

 

937. மண்ணோடு நீர்சேர சிறப்பமாகுமே எம்மோடுநின்னதன்

வாசிகூட ஒளியமயானோமே ஓம் சிவய சிவசித்தனே!

 

938. குறைசொல்லி முறையிட குன்றாதவல்லமையே உமையின்றி

யாருமில்லை புவனமதிலே ஓம் சிவய சிவசித்தனே!

 

939. செயலதனைத் துவங்குமுன்னே அச்செயலதனை ஆராய்ந்து

செயலாற்றும் செயலே ஓம் சிவய சிவசித்தனே!

 

940. வாழ்வதிலே உயர்நிலையை அடைவதற்கு உகந்தவழியது

நின்வாசியே நல்வழியே ஓம் சிவய சிவசித்தனே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply