சிவசித்தனின் 1009 பாடல்கள் – 941 – 950

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

1 (1603)

941. இயற்கையோடு இயங்குவதற்கு இயல்பை வழிவமைத்த

முன்னரே நன்னரே ஓம் சிவய சிவசித்தனே!

 

942. மென்மையிலும் மென்மையரே வன்மையது ஆட்கொள்ள கடுமையிலும்

கடுமையாய் ஒளிர்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

943. யாதொருகாலமும் ஆபத்துநாடாது அருள்கின்ற ஒளிப்பிழம்பே

மெய்யான மெய்க்காப்பாளரே ஓம் சிவய சிவசித்தனே!

 

944. உள்ளத்தின் உண்மையான உணர்ச்சிகளை வதனபாவத்தில்

கண்டறியும் ஆற்றலே ஓம் சிவய சிவசித்தனே!

 

945. உண்மையறிவான வாசியறிவை முழுமையாய் பெற்றிட்ட

மெய்ஞானமே மெய்மையே ஓம் சிவய சிவசித்தனே!

 

946. உண்மைச்செல்வமான உயர்ந்திட்ட செல்வமது நின்அருள்கின்ற

வாசியான செல்வமே ஓம் சிவய சிவசித்தனே!

 

947. புறஉணர்ச்சி மறந்திட்டே தன்னிலைமறந்தே மெய்மறக்கிறோமே

நினைநினைத்து அமர்கையிலே ஓம் சிவய சிவசித்தனே!

 

948. உண்மைப்பொருள் இன்னதென தெளிந்தறியச் செய்திட்டே

பேரறிவை அருளியவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

949. நின்வாசியால் இளைத்தல்பெற்றே வலுத்தலதையும் பெற்றோமே

மிருதுத்தன்மை அடைந்தோமே ஓம் சிவய சிவசித்தனே!

 

950. நுண்மையறிவோரே மென்மைசொல்லுக்கு உரியோரே பரிதவிப்பை

போக்குகின்ற பரோகாரியே ஓம் சிவய சிவசித்தனே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply