சிவசித்தனின் 1009 பாடல்கள் – 951 – 960

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

2 (257)

951. வலியாத வாழ்வின்இறுதியை அளிப்பவரே சுவாசத்தின்

சுகமாய் அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

952. நின்புகழை முழுங்குவதாலே கலங்காதிருக்கிறோமே எந்நாளும்

எப்போதுமே ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!

 

953. உண்மையான எம்மானே உம்சிவசித்தவாசி உள்ளுள்செயல்பட

உன்னதமாகுமே அகமே ஓம் சிவய சிவசித்தனே!

 

954. மூலிகையும் தேவையில்லை மூலவனேஉம் உண்மைவாசி

செயல்பட யாதும்வேண்டாமே ஓம் சிவய சிவசித்தனே!

 

955. தவறிழைக்கும் அறியாமையை தவறவிட்டோமே தவறாமல்

உம்விதியை ஏற்றதாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

956. ஐயனேஉந்தன் உண்மைப்பார்வை எதுவென்று உண்மையாய்

உள்ளவரே அறிவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

957. சித்தநிலையில் இருந்திட்டே உடல்மொத்த உள்நிலையை

உள்ளார்ந்து அறிந்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

958. உளவேக்காடு தணிந்ததே உடல்நோக்கோடும் ஓடியதே

கா(ல)த்தருளும் உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

959. நின்தந்ததேக நலனுக்குகாணிக்கை எதுவென்றோ நின்விதிப்படி

வாழ்ந்து மெய்யோடிருப்பதுவே ஓம் சிவய சிவசித்தனே!

 

960. புத்துலகம் படைத்தேபுனிதமாய் வடித்தேவாசியினால் நல் ஆசிதனை

அருள்கிறாயே படைக்கிறாயே ஓம் சிவய சிவசித்தனே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply