சிவசித்தனின் 1009 பாடல்கள் – 961 – 970

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

DSC02289

961. பலதான ஆன்மாக்கள் நின்குடில்வந்தே நற்கதி அடைந்ததே

நாளும்பொழுதும் ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!

 

962. ஓரிடத்தில் இருந்திட்டேபலநூறு இடங்களில் அவதரிக்கும்

ஆற்றலின் வடிவமே ஓம் சிவய சிவசித்தனே!

 

963. வளியோடு வளம்தந்தாயே உம்மைவலியின்றி வலம்வந்தே

ஏகாந்தம் அடைந்தோமே ஓம் சிவய சிவசித்தனே!

 

964. உம்மைமாயோன் என்றே நினைவேனோ மகவேதனாகி

எம்முள்நின்ற உம்மையே ஓம் சிவய சிவசித்தனே!

 

965. ஆதிகுருவாய் வந்தவரே பரசோதிஒளியாய் ஒளிர்பவரே

பரமாத்மவொளி ஆனவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

966. தன்னைத்தானாய் உணரவைத்து தன்னுள்ளிருப்பதும் தானென்ற

தனதாய் அறியவைத்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

967. சொல்லுள்ளே செயலாகி செயலதனை நலதாக்கி

நன்மையை அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

968. பெருஞ்சித்திகளைப் பெற்றோமே அதைத்தரும் அற்புதசித்தியே

நின்அருளிய வாசியே ஓம் சிவய சிவசித்தனே!

 

969. சுயம்புவாய் எழுந்தவரே சுவாலையொளியாய் ஒளிர்பவரே

சுகவீனம் அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

970. மாறாதஒன்றே நிலையானதே அந்நிலையானதை நிலையாக

தந்திட்ட நன்னிலையே ஓம் சிவய சிவசித்தனே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply