சிவசித்தனின் 1009 பாடல்கள் – 971 – 980

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

1 (1602)

971. சிவகுருமயமாய் இருந்திட்டால் கருமயமது காணாதுபோகுமே

உம்அருளாலே ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!

 

972. நாகரூபத்தை தலைமேல் வைத்திட்டே நர்த்தனத்தை

ஆட்டிவைக்கும் அற்புதரே ஓம் சிவய சிவசித்தனே!

 

973. பாவமெனும் கருமருந்தை பார்வையாலே பொசுக்கிவைக்கும்

பரவொளியின் திருவடியே ஓம் சிவய சிவசித்தனே!

 

974. வெண்ணொளியின் நாயகரே அகக்கண்ணொளியைத் தருபவரே

விண்கதியை அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

975. நினைக்கும் உருவத்தில் மாறியே நல்அருள்தருவாயே

நன்னயம் நடப்பவர்க்கே ஓம் சிவய சிவசித்தனே!

 

976. கண்ணைமூடிய நிலையிலே காட்சியும் கண்டோமே

உந்தன்கோலம் கண்டோமே ஓம் சிவய சிவசித்தனே!

 

977. நின்அருளிய வாசியாலே தேகமதுவளையும் தன்மைபெற்றே

வலிதன்னை மறந்தோமே ஓம் சிவய சிவசித்தனே!

 

978. உண்மையான வாசியின் சூட்சுமத்தை நாசிவழியே

அருளிய அருளாளரே ஓம் சிவய சிவசித்தனே!

 

979. கருமப்பொழுது வரும்வேளையில் நல்லுறக்கம் நாசிவழியே

அருளிய அருளாளரே ஓம் சிவய சிவசித்தனே!

 

980. வெண்ணழிவும் நின்றதய்யா வேப்புதலும் தணிந்ததய்யா

வீரியமானோமே நின்அருளாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

சிவகுருவின் பக்தன், 

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply