சிவசித்தனின் 1009 பாடல்கள் – 981 – 990

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

2 (256)

981. உம்காலநெறி தவறுவோர்க்கு காலே(ளையே)ளி வருவோனே

உணர்மையை உணர்த்திடுவாயே ஓம் சிவய சிவசித்தனே!

 

982. செந்நாவின் சுவைஅடக்கம் சூட்சுமத்தை உணர்ந்தே

செந்நிறனே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

983. செயலிழந்துபோனேனே செயலாற்றும் உம்முன்னே தன்னிலை

மறந்தே அமர்ந்தேனே ஓம் சிவய சிவசித்தனே!

 

984. இருவேறு பொருளுணர்ந்தேன் இருவேறையும் உம்முள்ளே

கண்டேனே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

985. அசைவம் ஒதுக்கச்செய்தவரே ஐயம் அகற்றச்செய்தவரே

வையத்தின் பெருவடிவே ஓம் சிவய சிவசித்தனே!

 

986. நாடியின்தன்மையின் உள்ளுள்ளே நடக்கின்ற உண்மையதை

உயிர்க்கலையால் உணர்த்தியவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

987. உண்மைஇறை எங்குண்டோ உண்மையுறையும் உம்சன்னதி

பூரணமாய் உண்டய்யனே ஓம் சிவய சிவசித்தனே!

 

988. பலர்குறையை தீர்த்தவரே பலஉரையை என்னுள்பதித்தவரே

தழிழோதும் தலைவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

989. இயற்கையை இயக்குகின்ற ஐயனே உம்மைஇகழ்பவரை

இயற்கையே தண்டிக்கும் ஓம் சிவய சிவசித்தனே!

 

990. உண்மையின் நெருப்பாற்றலே நெற்றியிலே நெறியவைத்த

நிதர்சனமே நித்தியரே ஓம் சிவய சிவசித்தனே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply