சிவசித்தனின் 1009 பாடல்கள் – 991 – 1000

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

DSC02288

991. உண்ணும்உணவின் தன்மையிலே கழிவும் அழிவும்வந்திடும்

என்றுணர்த்தும் எம்மானே ஓம் சிவய சிவசித்தனே!

 

992. காலைக்கதிரொளியாய் மாலையின் தென்றலாய் இரவின்நிசப்தமாய்

யாவையுமாய் இருப்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

993. உமக்கு ஈடுஇணை ஏதுமில்லைஐயனே வியாதிஎனும்

வித்தை அழித்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

994. காயமதின் உள்ளுள்ள மாயையது மாயமாயப்போனதே

உண்மைரூபமே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

995. சூனியத்தின் சூட்சுமும் தணிந்ததே ஆலவாயமர்ந்திட்ட

காருண்யரே உமையண்டலே ஓம் சிவய சிவசித்தனே!

 

996. உம்வதனம் நாகமும் காட்டுமே அதைக்காணவே

ஆயிரம்வழி வேண்டுமே ஓம் சிவய சிவசித்தனே!

 

997. நன்மைஅளித்திடும் உண்மைவாசியே நலம்தருமே நாளும்தருமே

எம்ஐயனே நின்வழியே ஓம் சிவய சிவசித்தனே!

 

998. காண்கையிலே ஓர்ரூபம் விழிமூடுகையில் விஸ்வரூபம்

அளிக்கும் விமலனே ஓம் சிவய சிவசித்தனே!

 

999. உண்ணாதுஉறங்காது உடல்வேகம் சலிக்காது உணர்வுகளை

ஊட்டுகின்ற உன்னதரே ஓம் சிவய சிவசித்தனே!

 

1000. ஆழ்தவத்தின் அருமைதனை ஒருமையோடு தந்திடுவாய்

நின்வாக்காலே வளியாலே ஓம் சிவய சிவசித்தனே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply