சிவசித்தனின் 1009 பாடல்கள் – 1000 – 1009

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்

2 (255)

1001. முன்சுழியும் பின்சுழியும் இதமாகஇழுக்கின்ற இறையுணர்வை

அளித்தருளிய இயற்கையே ஓம் சிவய சிவசித்தனே!

 

1002. நெருப்பாற்றல் தத்துவத்தை நடுநெற்றி வழியருள்பவரே

வெற்றிகளை அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

1003. யுகயுகமாய் இருப்பவரே அவனியாளும் பரவொளியே

அருள்நெறியை வகுத்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

1004. உள்ளமுள்ளே உமையுணரவில்லையே வாசியறியாத முன்னரே

வாசியறிய பரரேநீரன்றேனே ஓம் சிவய சிவசித்தனே!

 

1005. உண்மைக்குளிருந்தே மென்மையொளியாய் ஒளிர்ந்தே வன்மையதனை

வாசியாலே தீர்த்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

1006. அரிதிலும் அரிதானஅறியவரே ஐம்பொறியில் கலந்திட்ட

தவவொளியே பரவொளியே ஓம் சிவய சிவசித்தனே!

 

1007. எதுவுமே இல்லையின்றி எல்லாமும்நீரன்றே வருபவர்க்கு

எல்லாம் தருபவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

1008. முதற்பொருளாய் இருப்பவரே பரம்பொருளை உணர்த்திட்டே

மறைபொருளாய் மலர்ந்தவரே ஓம் சிவய சிவசித்தனே!

 

1009. பிரபஞ்சத்தின் பரவொளியே படைத்தலின் நாயகனே

நற்கதியை அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!

போற்றி !போற்றி !போற்றி !

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply