108 பாடல்கள் – ‘ஊ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

2 (253)

(64)

ஊமை கண்ட கனவு போல வாசியறிந்தேன்

படைத்தோனை தம் அகமதிலே அறிந்தனன்

இவ்விரு செயலும் அவனவன் அங்கம்மூலம்

அறிய வேண்டும் பிறர் சொல்லி உணரார்!

 

(65)

ஊனை அகற்றி உண்ணும் உணவை சிவகுரு

சிவசித்தர் சொல் வண்ணம் அறிந்தொதுக்கி

அன்றாடம் வாசியேற்றோன் அணுவதனை

அறிந்து ஆதியை அகமுள்ளே அறியன்!

 

(66)

ஊனை உருக்கி உள்ளுள் உத்தமவொளி

பெருக்கி வித்தகராம் ஸ்ரீ வில்வம் வாசியோக மைய

சிவகுரு சிவசித்தரவர் போதித்த வாக்கதனை

வளியோடு (வாசி) சேர்ந்து ஏற்பவன் எந்நாளும் நலமுறுவான்!

 

(67)

ஊக்கம் தந்து உள்ளுள் ஆக்கம் தந்து

தேக்கமான கழிவதனை தெறித்தோடச் செய்து

இறைதாக்கமதை இயக்கிடுமே இறைகலை

வாசியை இறைவடிவமான சிவகுருவின்மூலம் அறியும்போதே!

 

(68)

ஊடாடும் வாசியினை உணர்விலே

உணர வைத்து உணர்வதனை உடலெங்கும்

பரவவிட்டு சிதறும் மன உணர்வுகளை

ஒருமித்து ஓம்காரத்தை உள்ளே எழச் செய்யும் சிவகுருவின் வாசியே!

 

(69)

ஊறும் சுவையது மாறுமே சிவகுருவின்

வாசியை உள்ளே ஏற்றும்போதே! வாசியால் மாறும்

சுவையதே மாற சுவையது மனிதனுக்கு

ஏற்ற சுவையது என்பதை அறிவாய் மானிடனே இங்கே!

 

(70)

ஊளையிடும் நரியது உறுமும் புலிகண்டு

ஒதுங்கிடுமே அதுபோல வாசியை உணர்ந்தவன்

சொல்லும் வாக்குக்கு ஞானிகள், மகான்கள்

எவர்சொல்லும் அடங்கியே போகும் சிவகுருவின் வாசியை உணர்கையிலே!

 

(71)

ஊரெங்கும் பாரெங்கும் பார்த்திடா பதியதை

வாசியினால் அங்கமதில் அமரவைக்கும் நல்ஆசானே

சிந்தாமணி சிவகுரு சிவசித்தரப்பா! இவர் போலுண்டோ!

இனியும் வருவாரோ! இல்லையே என்பதே உண்மை!

 

(72)

ஊற்றெடுக்கும் நல் உணர்வதே! உற்றவரும்

பெற்றவரும் உணர்த்தா உணர்வதனை

கற்றுவிக்கும் வாசிகலையிலே வழிவகுத்து வாழ்வளிக்கும்

சிந்தாமணியின் மக்களை சீர்படுத்தும் சிவகலையே வாசிகலை!

 

(73)

ஊதிய உடம்பதை நினைத்துப் பெருமை

கொள்ளாதே! உள்ளே உள்ள அத்தனையும்

கழிவே! கழிவதனை வெளிதன்னில் ஏற்றாவிட்டால்

நிச்சயம் உனக்கு அழிவே சிவகுருவின் வளி(வாசி)யாலே!

 

(74)

ஊழ்வினையது ஏதுமில்லை அத்தனையும் நீஉண்ட

உணவாலே வந்த வினையப்பா! வினை என்னும்

பிணியை விரட்ட ஸ்ரீவில்வமதிலே உமைஇணைத்து

இறைவடிவான சிவகுரு சிவசித்தரை உம்உளமேற்றப்பா!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply