108 பாடல்கள் – ‘எ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

DSC02284

(75)

எல்லையில்லா பேரின்பமதை நல்குகின்ற நற்கலையே

தொல்லையதை தொலைத்துவிடும் தொன்மையான

வாசிகலையை உம்காயமுள்ளே எற்றுகையிலே

வாசியை உம்முள்ளேற்ற சிவகுரு சிவசித்தரை உம்நினைவிலேற்றப்பா!

 

(76)

எதையும் எதிர்பாராமல் எல்லோருக்கும்

நலமளித்து பல்லோரையும் பாரினிலே பக்குவப்

படுத்தி வல்லோனாம் வாசிநாதனை உண்மையாய்

உணரச் செய்திடுவார் சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!

 

(77)

எக்குலமாய் இருந்தாலும் எம் ஆசான்

சிவகுரு சிவசித்தர் முன்னே சிவகுலமே! மதபேதம்

இங்கில்லை மக்களுக்கு பிணிபோக்கி சுகம்

தரும் சூத்திரதாரியாம் சிவகுருமுன்னே சகலமும் ஒன்றே!

 

(78)

எட்டாக் கனியதை எட்டிப்பறிக்கும் மனிதன்

செயல்போல அசைவமதை ஒதுக்காமல் சிவகுருவின் இறைகலை

வாசியைப் பயில நினைக்கும் மானிடனே! கிட்டாது

ஒருபோதும் வாசியெனும் அமுதக்கனியே!

 

(79)

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்

என்று கூறியவர்கள் மத்தியிலே

எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்

எனும் மெய்கூற்றை கூறிய மெய்யரே சிவகுரு சிவசித்தர்!

 

(80)

எள்ளளவும் அச்சம் கொண்டு வாசிகலையை

பயிலாதே! அணுவைப் பிளந்து அணுவிற்கு ஆற்றல்

கொடுக்கும் பேராற்றலே எம் பெருமான்

சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே! மானிடனே இதை உணர்வாயாக!

 

(81)

எங்கில்லா விதிமுறை இங்கிருக்க இதை

ஏற்று பின்பற்ற வாழ்க்கையதின் துன்பங்களும்

பின்னே போகுமே! பொன்னான தருணமதை

பொன்னவன் சிவகுருவை பின்பற்றி வாழ்வை நன்றாக்கு மானிடனே!

 

(82)

எண்ணும் எண்ணமதாலே யாவர்க்கும் இன்பமும்

துன்பமும் வருவதன்றி பிறரால் வாராது

எண்ணமதில் வன்மைநீக்கி பக்குவத்தன்மை தந்து

பாதுகாக்கும் செயலைச் செய்வது சிவகுருவின் வாசிகலையே!

 

(83)

எமையாண்டு எம்முள்ளே உறைந்திருந்த பகைமை

எண்ணமதை பறந்தோடச்செய்து கயமை எண்ணமதை

காணமால் போகச் செய்து இச்சை எண்ணமதை

பக்குவப்படுத்தி இனிதான வாழ்வுதந்த முத்தரே சிவகுரு சிவசித்தரப்பா!

 

(84)

எழுத்தறிவு கொண்டேரெல்லாம் எல்லாம்

அறிந்தவராகார். அதையும் தாண்டி அங்கமுள்ளே

ஆதியான அற்புதக்கலை வாசியறிவை பயின்றோன்

முன்னே எவரும்பணிவர்! உண்மையை உணர்ந்து பார் மானிடனே!

 

(85)

எரிந்துவிடும் மருந்தெனும் தொக்கமது எம்ஆசான்

சிவகுரு சிவசித்தரின் அருட்பார்வை பட்டவுடனே

எந்தமந்திரமும் செல்லாது! மாந்தீரகமும் இங்கு

செல்லாதே! சிவகுருவின் சொல்வன்மை பொசுக்கிடுமே யாவற்றையுமே!

 

(86)

எதையும் எதிர்பார்த்து சேவையாற்றாதே சிவகுரு சிவசித்தர்க்கு!

முதன்மை இடத்தை கொடுக்குமே நீ செய்கின்ற

சேவையை உண்மையான உள்ளதோடு செய்கையிலே!

இறைதன்மையை அளித்து இதமான வாழ்வைநல்குமே வாசிகலையே!

 

(87)

எவருடனும் ஒப்பிடாதே ஒப்பில்லா மாமணியாம்

மதுரையம்பதி பெருமான் சிந்தாமணி சிவகுரு சிவசித்தனே!

ஆதவன்செயல்போல் அங்கத்திற்கு வாசியொளி புகட்டும்

பூவுலகப் புண்ணியரே சிவகுரு சிவசித்தர்!

 

(88)

எவரும் உணர்த்தா உள்உணர்வாம் உண்மை

உணர்வான இறையுணர்வை உலக இயக்கமான

வாசியாலே உமக்கு உணர்த்துவார்! உண்மை

இங்கிருக்க பொய்மையைத் தேடிப் போகாதே!

 

(89)

எவர்வாக்கும் எம்சிவகுரு சிவசித்தர் வாக்கிற்கு

ஈடுஇணையாகாதே! ஊடாடும் வாசியினை

உள்ளார்ந்த உணர்வோடு உணர்கையிலே!

சிவகுருவின்சொல் வாக்கை அறிந்திடுவாயே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply