108 பாடல்கள் – ‘ஏ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

 

(90)

ஏறிவரும் உடலில் உருவில்லா வாசியது மாறியதே

மாற்றங்களை நல்குமே! ஓடிவரும் துயரங்களும்

துன்பங்களும் துவண்டு கட்டுப்பட்டே இருக்கும்

கால்அறிந்து கால்நல்கும் கால்(ல)தேவன் சிவகுரு சிவசித்தர் முன்னே!

 

(91)

ஏடுபார்த்து எதையும் செய்ய மாட்டான்

வாசியோகம் பயில்பவன் காலத்தை நிர்ணயிக்கும்

காலதேவன் சிவகுரு சிவசித்தரின் திருவடி

நிழலில் வந்துபுகுந்தோருக்கு நவகோளும் நன்மையளிக்குமே!

 

(92)

ஏகனாய் நின்று எல்லோர்க்கும் வாழ்வளிக்கும்

ஈசனன்றோ எம்ஆசான் சிந்தாமணி சிவகுருசிவசித்தர்

பாசம் ஒதுக்கி பற்றை ஒதுக்கி பணம்காசை ஒதுக்கி

மனிதசுவாசம் ஒன்றே என்றெண்ணும் நல்நேசறன்ரோ சிவகுரு சிவசித்தர்!1 (1598)

 

(93)

ஏவல், பிணி எல்லாமே அறுந்தோடுமே

அசைவமுண்ணும் ஆவலதனை அடக்கியே

ஐம்புலனையும் ஒருங்கிணைத்து சிவகுரு சிவசித்தர்

அருளும் வாசிவழியே செலுத்தினால் வசப்படும் யாவையுமே!

 

(94)

ஏற்றிடுவார் எண்ணமதிலே தூயஎண்ணமதை

பார்த்திடா பரம்பொருளை பரப்பிடுவார்

உம்உடல் அணுமுழுவதுமே அணுவைப்பிளந்து

அணுவுக்குள் அணுவாய் இருந்து ஒளிரூபம்தந்திடுவார் சிவகுரு சிவசித்தர்!

 

(95)

ஏங்கித் தவித்திடுமே சிவகுருசிவசித்தரை விட்டு

விலகிய மனிதகுலமே எல்லாம் அறிந்த

சிவகுருவை ஏதும் அறியாது விலகிவிட்டோமே

மாயையதில் சிக்குண்டு மதிமயங்கிவிட்டோமே என்றே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply