108 பாடல்கள் – ‘ஐ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

 

(96)

ஐந்தும் அடங்கியே அவர்முன் புண்ணியமே

முந்திவரும் முருண்கெட்ட எண்ணமதும்

பிந்தியே ஓடுமே! வந்திறங்கி வாசியை

உன்னுள்ளே அருளிய சிவகுரு சிவசித்தர் முன்னே!

 

(97)

ஐயம் கொள்ளாதே வாசிகலையை எண்ணியே

மெய்யும் இவரன்றோ மெய்க்குள் பொய்யொதுக்கும்

மெய்யும் இதுவன்றோ! பாழ்கெட்ட மனிதருக்கு

பலமளிக்கும் சொர்க்கமும் ஸ்ரீவில்வவாசியோக மையமன்றோ!

 

(98)

ஐயனாம் சிவகுரு சிவசித்தரை துதிக்கையிலே

துயில்கொள்ளுமே தீயஎண்ணமதும், காயப்

பிணி களைந்து தூய வாழ்வளிக்கும் தூயவரே

உம்மந்திரத்தை சொல்லுகையில் பொல்லாங்கு ஓடிவிடுமே!

2 (252)

(99)

ஐவரும் வந்தே சிவகுரு ஐயனைப் பணிந்தே எம்ஆசான்

பணித்த பணிக்கே அண்டமுள்ளும் பிண்டமுள்ளும்

செயல்படுமே! அனைத்துலக உயிரினங்களும் வந்துபணியுமே

சிவகுரு சிவசித்தரை அனுதினமும் வந்தே!

 

(100)

ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்றவளும்

அகம் மகிழ்வாள் தன்பிள்ளை வாசிபயின்று

நல்வாழ்வு வாழும்போதே பொய்மையான

மானிடர்கள் மத்தியிலே மெய்மையாய் வாழச்செய்யுமே

சிவகுருவின் வாசிகலையே!

 

(101)

ஐங்கழிவு வெளியேறுமே அங்கமுள் வாசியேறுகையில்

முன்பிருந்த சீர்கெட்ட பண்பதுமே நல்லுறுமே

கழிவதை களைய நலிவுறுமே தீயஎண்ணமதுவே

பொலிவுறுமே புத்துணர்வதுமே அனைத்தும் கழிவாலே!

இதுவே சிவகுருவின் கூற்றே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply