108 பாடல்கள் – ‘ஒ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

 

(102)

ஒன்றேகுலம் ஒருவனே தேவன் எனும் கூற்றை

மெய்கூற்றாக்கும் செயலை எம்மையத்தில் காணலாகுமே

ஸ்ரீவில்வமையதில் மதபாகுபாடுகள் மறந்து சகலமும்

சிவகுரு சிவசித்தரென்று பணியும் பணிவைக்காணலாமே!

 

(103)

ஒருமையுற்ற எண்ணத்தோடு ஓம்காரத் தன்மையான

சிவகுருவின் வாசியைப் பயிலும்போது உன்னுள்ளுள்ள

கருமைஎனும் தொக்கமது தோற்றுவிடுமே

தோய்வான எண்ணமதுவுமே மாய்ந்து போகுமே!

DSC02283

(104)

ஒருவராய் இருந்து எண்ண வெறுமையதை

ஒதுக்கியே! அகத்துள் பதுங்கிக் கிடங்கும்

பாழ்பட்ட எண்ணமதையும் பாழாக்கியே மேலினும்

மேலான எண்ணமதை காயத்தில் உணர்த்தும் காரணியே சிவகுரு சிவசித்தர்!

 

(105)

ஒடுங்கும் உடலதுவுமே உடலது ஒடுங்க

ஓங்குமே நல்எண்ணமதுவே தேங்கும் கழிவதனை

தினம்தினம் வெளியேற்ற மனமது நல்வண்ணம்

மாறியே நாரணனும் நமச்சிவமும் நாயகன் சிவகுருவின் உள்ளே என்பதை அறிவாயே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

 

 

Leave a Reply