சிவசித்தனின் “முதலும் முடிவும்”

சிவகுருவே சரணம்!

“முதலும் முடிவும்”

சிவகுரு சிவசித்தனின் வாசி கற்கையிலே!
ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான
நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை
பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின்
சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே!
எமை காக்கும் சிவகுருவே! சிவசித்தனே!
உம் திருவடி பணிகின்றேனே!

 

இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய்
வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திருஉருவம்
தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி
சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில்
ஓதும்போது தீவினைகள் அண்டாது எதிர்மறை
சக்தியெல்லாம் இல்லமதில் இல்லாமல் போகுமே!

சித்தியிலே பெரிய ஞானசக்தி எம் ஆசான்
சிவகுரு சிவசித்தன் பிராணன் மூலம் அறிய
வைக்கும் சிவமாகிய வாசி சித்தியே! இச்சித்தியினை
அறிந்தவர்க்கு எல்லாம் தெளிந்து உள்ளமது
ஒருங்குற்று ஆழ்மனது அமைதியுறுமே! அவனியிலே
இதுபோன்ற வாசிசித்தி அளிக்கும் சிவசித்தனின்றி வேறுஇலர்!

ஆயிரம் ஆலயங்கள் அமைத்தாலும் அந்த
ஆலயத்தில் பூஜைகள் பல செய்தாலும்
கிட்டாத புண்ணியத்தை பெறமுடியாத சக்தியினை
சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் கற்றவர்க்கு
கைகூடும்! இது கால் அறிந்த மானிடர்கள்
அறியக்கூடிய அற்புத செயலன்றோ!

 

துன்பக்கடலில் நீந்துவோர்க்கு நிம்மதி தந்து
நித்ய வாழ்வளிக்கும் புண்ணியரே! எம் கர்ம
வினை தீர்த்து வன்மமான எண்ணத்தை அழித்த
ஆதிசிவ பிறையொளிச் சுடரே! உம்திவ்ய
மலர் பாதங்களை தொழுது பயன் பெற்றவர்கள்
ஏராளமுண்டு ஸ்ரீவில்வ தேக மையமதிலே!

DSC02282

சிவகுருவின் திருப்பார்வை கண்டாலே உருக்குலைந்து
மனமும் உறுதிப்படுமே அக்கணமே!
தெளிவில்லா மனமதுவும் பொலிவு பெறுமே
சிவகுருவின் திருவாக்கை கேட்டவர்க்கே!

முன்னிருந்த புண்ணுடலும் பொலிவாகி பொன்னுடல்
ஆகுதப்பா சிவகுரு சிவசித்தனின் வாசிகலையிலே!
கண்விழித்து கால்இழுத்து காலையிலே வாசிசெய்தவர்க்கு
வந்திடுமே நல்ஒழுக்கமது எந்நாளுமே!

மருந்துலகம் கைவிட்டு மாண்டு போவோம்
என்று மனவேதனையுற்று மானிடரையும்
எம் சிவசித்தனின் வாசிதேகம் மறுவாழ்வு
தந்து உயிரூட்டும் உண்மைதனை உணர்வதற்கு
ஸ்ரீவில்வ வாசிதேகம் தேடி நாடிவா மானிடனே!

மனித எண்ணங்களின் சூட்சுமமாய் விளங்கும் வாசியே!
மனித உயிரின் சூட்சுமமான வாசியே ஈசனே!
உன்னை(வாசி) அறிந்தாலே உண்மை உணர்வீரே!
உலகில் வேறெதுவும் தேவையில்லையே!
வாசிதேகத்தை எங்களுக்கருளிய ஈசனே!
எம் சிவகுரு சிவசித்தனே!!!

வேண்டுவன எல்லாம் கிட்டும்! அசைவமதை
தீண்டாமல் சிவசித்தனின் வாசிகற்கையிலே!
எண்ணும் எண்ணமெல்லாம் ஏற்றமுறுமே எம் ஆசான்
சிவகுரு சிவசித்தனின் வாசிகற்பவருக்கு!

பாலோடு சேர்ந்த நீரதனை தனியே பிரித்தெடுக்கும்
அன்னமதின் தன்மை போலன்றோ – கால்கொண்டு
காயமதில் சூழ்ந்த கழிவதனை தனியே
களைந்தெடுக்கும் நற்காரியம் நடக்குதன்றோ
சிவகுரு சிவசித்தனின் வாசிகலையதனாலே!

அத்துணையும் அறிந்தவர் சிவகுருவே!
ஆலவாய் பதியினிலே அழகிய சிந்தாமணியிலே
அமர்ந்த சிவகுருவே! சித்தருக்கும் சித்தரான
சிவகுருவே! சித்திகள் அனைத்தையும்
அறிந்தவர் சிவகுருவே! இறைபக்திக்கும்
மேலான குருபக்திக்கு உரியவர் சிவகுருவே!
உடலை சுத்தி செய்து சிவசித்தியை
வாசியால் உள்ளூட்டி உத்தமரை
உணர வைப்பவர் சிவகுரு சிவசித்தனே!

சிவகுருவின் பக்தன்,

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Leave a Reply