ஆதியும் அந்தமும் சிவகுருசிவசித்தனே!….

ஆதியும் அந்தமும் சிவகுருசிவசித்தனே!

பிறவிப் பிணி தீர்த்து பிறப்பறுக்கும்
பெருங்கலையாம்! பிறைசூடும் பெருமான்
அருளிச்செய்த கலையாம்! எம்குருவான
சிவசித்தன் கற்றுணர்ந்து கற்றருளும்
வாசியெனும் உயிர்க்கலையே அக்கலையாம்!


சிற்றின்ப சேற்றிலே சிக்கித் தவித்த
சிற்றறிவான எமை பேரறிவான
பேராற்றல் கொண்ட பிறை சடையானை
உயிர்க்கலையாம் வாசிகலையால் உள
கூட்டதிலே ஒளிரச்செய்த மெய்யறிவு
கொண்ட எம் ஆசானாம் சிவசித்தனை
பணிவுடன் பணி மனமே!


சூரிய விளக்கு போல் வாசியோக
குருகுலம் இருக்கையிலே! சுடர்விளக்கு போல
மற்ற யோக மையங்கள் இருந்து
ஏது பயன்! பயனொன்று மில்லையே
மானிடரே சிந்திப்பீரே!


ஆதியாய் இருந்து அகிலத்தை இயக்குபவரே!
அனாதியாய் பற்றறுத்த பரம்பொருளாய் இருப்பவரே!
சீவசோதியாய் என்னுள் ஒளிர்பவரே!
வாசியாய் இருந்து எமைக்காக்கும் சிவமே!
போற்றி! போற்றி! அவ்வாசிதனை
எனக்குள் உணரவைத்த சிவசித்த நாதனே!
போற்றி! போற்றி! போற்றி!


1 (1596)

எம் சிவசித்தனின் சிவகலையான வாசிதேகத்திற்கு
ஈடு இணை ஏதும் உண்டோ! இல்லைஎன்பதே
உண்மையப்பா! மருந்தின்றி மாத்திரையின்றி
நோய் போக்கும் யோகக்கலை ஏதுமுண்டோ!
எதுவுமில்லை! இச்சிறப்பு வாசிதேகமதை
சிந்தையிலே சிந்தியப்பா!


சிவகலையாம் சிவசித்தனின் வாசிக்கலையால்
உடலும் உள்ளமும் புதுவாழ்வு மலரப் பெற்றேன்!
உள்ளுறுப்புகள் அனைத்தும் பலம்பெற பெற்றேன்!
வாசிகற்றவர்க்கு எல்லாமும் நலமே!
எப்பொழுதும் சுகமே! மானிடரே! வாசிக்கலையால்
நவவாசல் தூய்மை அடைந்தவரை
நவகோள்களால் வரும் பாதிப்பு எதுவும் செய்யாதே!
வாசிக்கலையை செய்திடுபவர்க்கே!


அதிகாலையிலே துயில்களைந்து அங்கமதை துலக்கி
வாசிசெய் சிவகுருவை வணங்கி!
தேகக்கூட்டிலே தேங்கியுள்ள தேக்கமதை தெறித்தோடச்செயும்
செயலே வாசியெனும் தேகக்கலை!
இன்மையில் இறையுணர்த்தும் வாசிகலை பயின்றோர்க்கு
மறுமையில் (???????——–?) மறவாதே மானிடரே!


காயமது காலற்று காடுகண்டு கருகுமுன்
காலறிந்து சிவமுணர்க சிவகுருவாலே!


உணராத உண்மையதை உணர்ந்தேனே!
அறியா ஆதியதை அறிந்தேனே!
எட்டா எல்லையதை எட்டியே
ஏகவொளியான இறையதை உணர்ந்தேன்
உயிர்க்கலைஎனும் வாசிகலை வழியே!
சிவகுருவின் நற்றுணையோடு சிவமதை உணர்ந்தேன்
வாசிபயின்று இறைசூழ் எமை சூழ்ந்திருக்கும்
போது நவகோள் பாதிப்பு அண்டாதே!


உயிர்க்கலைக்(வாசிதேகம்) கொண்டு உளஉடல் பிணியகற்றி
உயிர்களைக்காப்பவர் சிவசித்தனே!


ஈன்றெடுத்த சேயினும் உமையீன்ற தாயினும்
உம்அங்கமது பிணியுற்று அலறித்தவிக்கும்
தருணமதில் ஆறுதல் சொல்ல ஆயிரம்
பேருண்டு! அப்பிணிதனை அறுக்கும் ஆற்றல்
யாருக்குண்டு! வாசிபுகட்டி சிவம் உணர்த்தும்
சிவச்சுடராம் சிவசித்தனே! அப்பேராற்றலாம்!


வாசிதேகம் உடையோர் எல்லாம் உடையோர்

வாசிதேகம் பயிலார் ஏதுமிலார்!


ஆணாயினும் பெண்ணாயினும் சிவச்சுடராம்
சிவசித்தனின் வாசிதேகம் பயிலுபவர்
எவராயினும் இல்லறத்தில் நல்லறத்தை
கைக்கொண்டு வாழ்வதனை வளமாக்கி
வாழ்ந்திடுவர்! வாசிதேக குருகுலத்தின்
வாசிகற்கும் மெய்யன்பர்களின்
மெய்க்கூற்று இதுவே!


குருவறியாது திருவறியும் எண்ணமது வீணே!
சிவகுருவறிந்து சிவமுணர்க வாசியாலே!
அந்தரத்தில் ஆடுகின்ற அம்பலத்தே! பஞ்சாட்சர
மந்திரத்தில் உறைந்து பரம் பொருளதை
தந்திரத்தில் காணமுடியா திரிசடையனை
சந்திரப் பிறைசூடிய சுந்தரனை
சுழுமுனையின் வழியாக உயிர்க்கலையில்
உணர வாய்த்த மெய்யனே! எம் ஐயனே!
சிவசித்தனே உம் தாழ் பணிந்தேனே!


வாசி உணர்ந்தவர்க்கு உணர வேறொன்றுமில்லை
ஏதெனில் வாசியே சிவமாதலால்!


சதா ஆதிசிவனை எண்ணியபடி
சதா எண்ணிக்கொண்டு தியானம்
செய்யும் மாமுனியும் அடையாத
சிவச்சுடராம் சுழுமுனையை உள்ளுள்
உணர வைத்த உத்தமனே!
வாசிகலையின் வித்தகனே சிவசித்தன்!

Leave a Reply