நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார்.

பாவம் நேற்று வரை நன்றாக இருந்தார். இன்று திடீரென்று இறந்து விட்டார் என்று பலர் வருத்தப்பட்டு நான் கேட்டிருக்கிறேன். நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார்.

அவர் உடலில் பல நாள் அவர் உணராமல் அவர் செய்த தவறால் விளைந்த விளைவே அவர் மரணம். அவர்தான் உணராமல் போய்விட்டார். அவரைச்சுற்றி உள்ளவர்களாவது உணரவேண்டும்.

ஐயோ பாவம் என்றால் அவர் பாவத்தில் நீங்கள் பங்கு கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை இனி இப்படி ஒரு உயிர் போக நான் விடமாட்டேன் என்றால் அதுவே உங்களுக்கு புண்ணியம். இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தவறான உணவை உண்கிறார்கள்.

1 (1595)அறிவுரை கூறினால் இல்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்கிறான். அந்த உணவால் எனக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை என்கிறான். இன்றைய இளம் தலைமுறையினர் தேவைக்கு அதிகமாக உண்கிறார்கள்.

அவர்கள் அதனால் வரப்போகும் தொந்தரவை உணர்வதில்லை. உடல் பெருத்து, வயிறு பெருத்து பிறகு அதைக் குறைக்க படாதபாடு படுகிறார்கள்.அதன் பிறகு மெல்ல வலி அவனை தொற்றுகிறது. அப்போதும் அவன் அதை ஏற்கமறுக்கிறான். மருத்துவரை நாடுகிறான்.

மருத்துவரும் அவனுடைய தவறான உணவு பழக்கத்தை கண்டிக்காமல் மருந்து என்று ஒன்றை கொடுத்து அவனை மேலும் தவறு செய்ய தூண்டுகிறார். இப்போது அவன் இரண்டு தவறை செய்ய ஆரம்பிக்கிறான்.

ஒன்று தவறான உணவு மற்றொன்று மருந்து. மருந்து அவன் உடலின் உணர்வுகளை மழுங்கச் செய்கிறது. விளைவு இளம் வயதில் நிரந்தர நோயாளியாக அவன் மாறுகிறான். இதனால்தான் இப்போது இளம் வயதில் பலர் நோயின் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

மேலும் இளம் வயதிலேயே மரணிக்கிறார்கள். காரணம் அவர்கள் உண்ணும் தவறான உணவேபெயர்    : தி.சு. ஜெயகுமார்

வாசியோக வில்வம் எண் : 13 05 013

அலைபேசி   : +91 98428 69274

முகவரி   : அவனியாபுரம்,

                            மதுரை – 12.

Leave a Reply