1. மனிதன் உடலில் ஏதேனும் ஒரு நோய் அல்லது ஒரு வலி வந்த பிறகு தான் தனது உடம்பை கவனிக்க ஆரம்பிக்கிறான்.
  அது வரையிலும் தனது உடம்பை கவனிக்க நேரம் இல்லாதது போல் நடந்து கொள்கிறான்
 1. இது வரையிலும், தான் தனது உடம்பைப் பாதுகாக்கத்தவறியது தன் தவறு என உணர்வதில்லை.மாறாக எனக்கு மட்டும் ஏன் இத்துன்பம் என கேள்விகளும் இறைவன் ஏன் இந்த நோயை எனக்கு கொடுத்தான் என்று புலம்பவும் செய்கிறான், மனிதன்.
 1. வெந்தததையும் வேகாததையும், கண்டதையும் உண்டு உணவுக் கட்டுப்பாடின்றி, மனக்கட்டுப்பாடின்றி ,மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
 1. தான் வாழும் வாழ்க்கை தான் உண்மையானது என நினைக்கும் மனிதன் தீராத நோய்களையும், வலிகளையும், துன்பங்களையும் ஏன் அனுபவிக்கிறான்?
 1. தன் எண்ணப்படி வாழ்க்கை வாழ்ந்து வரும் மனிதன் நோய் வந்தவுடன் தன் இயல்பு மாறுகிறான்.
  1. தனது மற்றும் தன் குடும்பத்தினரது எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறான்.
  2. இறைவனும் தன்னிடம் இரக்கம் கொள்ளவில்லை என்று கவலை கொள்கிறான்.
 1. தன் உடம்பின் மீது அக்கறை கொள்ளாமல் வாழ்ந்து விட்டு நோய்களும் வலிகளும் வந்த பின்பு தன் உடம்பு தன்னை பாடாய்படுத்துகிறது என்று உடம்பைக் குறை கூறுகிறான் மனிதன்.
  உண்மையில் உடம்பு உன்னை படுத்தவில்லை நீ தான் உடம்பைப் படுத்துகிறாய் என்று மெய்யின்(உடம்பு) மெய்யை(உண்மையினை) எடுத்து உரைக்கிறார் வாசியோகம் கற்றுத் தரும்சிவகுரு சிவசித்தன்.

2 (249)

( 7). மனிதன் உடம்பில் நோய்கள் ஏன் உண்டாகின்றன?

(1 ) உண்ணும் உணவு
(2 ) சோம்பல்
(3 ) உடலைப்பற்றிய அக்கறையின்மை
மேற்கண்ட காரணங்களை(உண்மைகளை) ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இன்மை.
இதுவே உடம்பில், உடல் உபாதைகள் (நோய்கள்) உண்டாகக் காரணம் ஆகின்றன என மெய்யின் மெய்யினை மெய்ப்பிக்கிறார் சிவகுரு சிவசித்தன் தமது வாசியோகக் கலையின் மூலம்.

(8). மருந்து மாத்திரைகள் இன்றி உடலில் ஏற்பட்ட உடல் உபத்திரவங்களை (நோய்கள்) போக்க முடியுமா?

முடியும் என்று மெய்பிக்கிறார் சிவகுரு சிவசித்தன் தமது வாசியோகக் கலையின் மூலம்.

9(1).நோய்களும், வலிகளும் (தனது அல்லது பிறரது) அனுபவிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம்.

(2)மருந்து மாத்திரைகள் (தனக்கு அல்லது தன் குடும்பத்தினருக்காக) இல்லாத வீடுகள் இல்லை எனலாம்.
(3). இதனால் மன உளைச்சல் ஏற்படாதவர்கள் யாரும் இல்லை எனலாம்.
நோய்களும், வலிகளும் இல்லாத, மருந்து மாத்திரைகள் செலவு இல்லாத, மன உளைச்சல் இல்லாத ஒரு புதிய உலகத்தினைப் படைத்துக் கொண்டிருக்கின்றார். சிவகுரு சிவசித்தன் தமது வாசியோகக் குருகுலத்தில்.

 1. உண்ணும் உணவு தான் நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகிறது என்கிறார் சிவகுரு சிவசித்தன். எனவே தான் தமது வாசியோகப் பயிற்சியாளர்களுக்காக உணவு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.
  உண்ணும் உணவு வகைகளுக்கு விதிமுறைகளா?
  இது நடைமுறைக்கு சாத்தியமா?
  சாத்தியமாக்கிக் காட்டுகிறார் சிவகுரு சிவசித்தன் தமது வாசியோக குருகுலத்தில்.

பெயர் : பூர்ணிமாய். த.இரா

வாசியோக வில்வம் எண் : 12 09 108

முகவரி : அவனியாபுரம்,

                             மதுரை – 12.

Leave a Reply