11.அசைவ உணவு உண்பதை அடியோடு விட்டு விடுபவர்கள் தான் வாசியோக குருகுலத்தில் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.

12.அசைவ உணவு உண்பதை விட முடியாதவர்கள், அசைவ உணவு பிரியர்கள் வாசியோகப் பயிற்சியில் சேர முடியாதா?
முடியாது. சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளில் விதிவிலக்கு எதுவும் இல்லை.

13.சிவகுரு சிவசித்தனின் விதிமுறைப் புத்தகங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவு வகைகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டவர்கள், உணவு விதிமுறைகளை சரி என ஒப்புக் கொண்டவர்கள் சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளை உண்மையாக பின்பற்றுகிறார்கள்.

உண்மையாக இருப்பவர்கள் நோய்களுக்கு காரணமான
உடற் கழிவுகள் நீங்கி உடல் நலம் பெறுகிறார்கள்.

மற்றவர்கள் தமக்குத் தாமே உண்மையாக இல்லாததால்
உணவு விதிமுறைகளை மீறுகின்றனர். உடல் நலம் பெறுவதை தாமதிக்கச் செய்து கொள்கின்றனர் தாமாகவே .

 1. மனிதன் உணவு மீதான ஆசையினை ஏன் கட்டுபடுத்திக்கொள்ள முடிவதில்லை?.
  “ஆசை என்பது இல்லை” என்கிறார் சிவகுரு சிவசித்தன்
  உணவின் மீதான விருப்பம் உன் எண்ணமே, என்கிறார் சிவகுரு சிவசித்தன்.
  அதனை உணரவும் வைக்கிறார் தமது வாசியோக பயிற்சியின் மூலம்.1 (1593)
 1. அசைவ உணவு, எண்ணெய் பலகாரங்கள், காரம், உப்பு, புளிப்பு மிகுந்த உணவு வகைகள் உடலுக்கு கெடுதி விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே.
  ஆனாலும் உணவு உண்ணும் செயல்களை ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை வருவதில்லை.
  உணவு முறையை நெறிப்படுத்தும் வழிவகைகளைச் சொல்லி வழிநடத்துகிறார் சிவகுரு சிவசித்தன் தமது வாசியோக பயிற்சியாளர்களுக்கு.

16.உடலுக்கு கெடுதி விளைவிக்கும் உணவு வகைகளை உண்ணாதிருக்கவும்,
தவிர்க்கவும் கூடிய மன வலிமையும், நோய் (கழிவுகள்) நீங்கி உடல் நலமும்
பெறுகிறார்கள் வாசியோகப் பயிற்சியாளர்கள்.

. 17. தினமும் குறித்த நேரத்தில் உணவு உண்ணும் செயல் நல்லது என்றும் நமக்குத் தெரியும்.
ஆனாலும் கடைபிடிப்பதில்லை.
அதற்கு பல காரணங்கள் சொல்வோம்.
உணவுக்கான குறித்த நேரம் எது என சொல்லி அதனை கடைபிடிக்கும் வழியினை கற்றுத் தருகிறார். சிவகுரு சிவசித்தன்

 1. வாசியோகப் பயிற்சியாளர்கள் தினமும் பயிற்சிகள் செய்வதாலும், சிவகுரு சிவசித்தனின் உணவுமுறைகள் பின்பற்றுவதாலும் உடல் நலம் பெறுவதை உணர்கிறார்கள்.
  நாம் உண்ட உணவும், உண்ணும் உணவும் தான் தனது நோய்க்கு காரணம் என்பதை தானாக உணர்கின்றனர்.
  “உண்ணும் உணவு தான் நோய்க்கு காரணம்.
  நோய் என்பது இல்லை”
  எனும் சிவகுருவின் கூற்று உண்மை என உணர்கின்றனர்.
 1. நாற்பது வயதிற்குள் பி.பி., சுகர். தைராய்ட், மூட்டுவலி, மாரடைப்பு இன்னும் பல பல புது புது நோய்கள்.
  இன்ன செய்வது என தெரியாதோர் ஒருபுறம்.
  மருந்து மாத்திரைகளுடன் வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான் என தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டோர் ஒருபுறம்.
  நோய்களுக்கான தீர்வு தேடி பல பல சிகிச்சைகள் செய்து நோயுடன் போராடுவோர் ஒருபுறம்.
  ஏன் இந்த நிலை?

பெயர் : பூர்ணிமாய். த.இரா

வாசியோக வில்வம் எண் : 12 09 108

முகவரி : அவனியாபுரம்,

                             மதுரை – 12.

Leave a Reply