வாசியோக சேவையாளர்கள் கவனத்திற்கு மற்றும் நினைவில் கொள்வதற்கு

வாசியோக சேவையாளர்கள் கவனத்திற்கு மற்றும் நினைவில் கொள்வதற்கு

வாசியோக சேவையாளர்கள் சிவகுருவிடமிருந்தோ அல்லது மையத்தின் நடைமுறைகளில் இருந்தோ சலுகைகள் எதிர்பார்க்கக்கூடாது. சிவகுருவிடமிருந்து சலுகைகள் எதிர்பார்த்து சேவை செய்ய வரக்கூடாது.

சேவையாளர்கள் சலுகைகள் வேண்டும் என்று கேட்கவும் கூடாது. மேலும் அவர்களாகவே சலுகைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

உதாரணமாக, பயிற்சியாளர்கள், சிவகுருவை சந்திக்க அனுமதி பெறவேண்டும் மற்றும் அனுமதி பெற்ற நேரத்தில்தான் வரவேண்டும் என்று கூறும்பொழுது, அந்த விதிமுறை சேவையாளர்களுக்கும்தான் என்பதை நினைவில் கொண்டு சேவையாளர்களும் அதன்படி நடக்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் சேவையாளர்கள் அதை முதலில் கடைபிடித்து பயிற்சியாளர்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். உணவுமுறைகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்காமல், சேவையாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அடிக்கடி சிவகுருவை தேவையில்லாமல் தொடர்பு கொள்வதும், தீர்வு கேட்பதும் தவறான செயல் ஆகும்.

1 (1592)சிவகுருவை சந்திக்க வருவதாக இருந்தால், மையத்தில் இருக்கும் போதே சிவகுருவிடம் எல்லாவற்றையும் கூடுமானவரை சொல்லி அனுமதி வாங்கி விடவேண்டும், வீட்டிற்கு சென்று பிறகு சிவகுருவிடம் தொலைபேசியில் சொல்லலாம் என்று நினைப்பது தவறான செயல் ஆகும்.

சிவகுரு தொலைபேசி எடுக்கவில்லை என்றாலோ அல்லது சிவகுருவின் தொலைபேசி செயல் இழக்க வைக்கப்பட்டு இருந்தாலோ, நீங்களாகவே ஒரு முடிவை எடுத்து சிவகுருவை சந்திக்க வரக்கூடாது.

அது நீங்கள் சிவகுரு மீது உரிய மரியாதை வைக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு புதிய பயிற்சியாளர் மையத்தில் சேருவதற்கு என்ன நடைமுறையோ அதுவே மையத்தில் சேவை செய்யும் நபரின் குடும்ப உறுப்பினர் சேருவதற்கும் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.

சலுகைகள் எப்போதும் சிக்கலையே உருவாக்கும் என்பதையும், மற்றவர்கள் நம் மீது தவறான எண்ணத்தை வைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்து விடும் என்பதையும் மறந்து விடக்கூடாது. 

பெயர்: தி.சு. ஜெயகுமார்

வாசியோக வில்வம் எண் : 13 05 013

அலைபேசி : +91 98428 69274

முகவரி : அவனியாபுரம்,

                             மதுரை – 12.

Leave a Reply