1. நோய்களுக்கான காரணம் எது என தெரியாத, தெரிந்து கொள்ள முயற்சிக்காத அறியாமையே இந்நிலைக்கு காரணம் என்கிறார் சிவகுரு சிவசித்தன்
 1. வாசியோகக் கலை பயில்வதற்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்துதான் பயிற்சிக்கு வரவேண்டும்.

கணவனோ மனைவியோ தனியாக பயிற்சிக்கு வரும்பொழுது சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகள் மற்றும் வாசியோக விதிமுறைகளை
முறையாக பின்பற்ற முடிவதில்லை

விதிமுறைகள் பற்றிய விபரங்கள் கூட மற்றவருக்கு (கணவன்/ மனைவி) தெரிவதில்லை.

பயிற்சிக்கு இருவரும் சேர்ந்து வருவதால் பயிற்சி பற்றிய விபரமும் விதிமுறைகளின் முக்கியத்துவத்துவத்தையும் தெரிந்து கொண்டு முறையாக பின்பற்ற முடிகிறது.

எனவேதான் சிவகுரு சிவசித்தன் தமது வாசியோகக்கலை பயில்வதற்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்துதான் பயிற்சிக்கு வரவேண்டும் என்பதை நிபந்தனையாகவே விதித்துள்ளார்.

 1. மனிதன் தன் நோய்களை சரி செய்து கொண்டு உடல் நலத்துடன் வாழ எண்ணுகிறான்.  சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளை ஒப்புக்கொண்டு பயிற்சிக்கு வரவும் விரும்புகிறான்.

2 (246)

ஆனால் அவனது மனைவியோ தன்னால் மாமிசம் சாப்பிடாமல் இருக்க முடியாது, மேலும் உணவு விதிமுறைகளை தன்னால் கடைபிடிக்க முடியாது என்றும் கூறுகிறாள். எனவே கணவன் பயிற்சிக்கு வர முடியவில்லை.

இதே போலத்தான் சில இடங்களில் கணவன் இதே மாதிரி சொல்லும்பொழுது மனைவியும் வாசியோக பயிற்சிக்கு வரமுடிவதில்லை.

இந்நிலை ஏன்?

 1. சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளில் மிக மிக முக்கியமானது
  மூன்று வேளை உணவையும் குறித்த நேரத்தில் உண்ணவேண்டும், உணவில் அதிக காரம், புளிப்பு, உப்பு சேர்க்க கூடாது.                                                                                                                                                            அசைவ உணவு உண்பதை அடியோடு விட்டு விட வேண்டும்.
  சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
  உண்ணும் உணவு முறைகளில் கணவன், மனைவிக்கு கருத்து வேறுபாடு இருந்தால் உணவு விதிமுறைகளை உண்மையாக கடைபிடிக்க முடியாது. எனவே தான் கணவன், மனைவி இருவருமே உணவு விதிமுறைகளை ஒப்புக்கொண்டு வாசியோக பயிற்சிக்கு வரவேண்டும் என்கிறார் சிவகுரு சிவசித்தன்.
 1. வாசியோக பயிற்சிக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வருவதால், பரஸ்பரம் இருவருக்கும் இடையில் அக்கறையும், புரிதலும் ஏற்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் சிவகுரு சிவசித்தன் வாசியோக பயிற்சிக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வரவேண்டும். என நிபந்தனையாகவே விதிதுள்ளார்.

 1. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பயிற்சிக்கு வருவதால் வாசியோக பயிற்சியின் பயனை உணர்ந்து தங்களது குழந்தைகளையும் பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர்.

எதிர்காலச் சந்ததியினர்களை நல்வழிப் படுத்துதல், மற்றும் பெற்றோர்களை வழிநடத்துதலையும்
செய்து காண்பித்து, தனிஒரு மனிதனுக்கும், அவனது குடும்பத்தவர்களுக்கும் வாசியோகக்கலை ஏற்றது என மெய்ப்பிக்கிறார் சிவகுரு சிவசித்தன்.பெயர் : பூர்ணிமாய். த.இரா

வாசியோக வில்வம் எண் : 12 09 108

முகவரி : அவனியாபுரம்,

                             மதுரை – 12.

Leave a Reply