தன் உடல் கழிவுகள் நீங்கப்பெற்று, அவன் தன் அகத்தை உணர ஆரம்பிக்கின்றான்

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

பால்ய வயது முதலே அடுத்தவர்களின் வழிகாட்டல் படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அடுத்தவர்களின் வழிகாட்டலை சுய பரிசோதனை செய்து பார்த்து அவர்களுடைய வழிகாட்டலை பின்பற்றுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அடுத்த அடுத்தவர்களை தேடிச் செல்பவன் இறுதியில் சிவகுரு சிவசித்தன் அவர்களை நாடி வந்து விடுகின்றான்.

இங்கு வந்த பின்பு தான் அவன் முதன்முதலாக கழிவான உடல் கொண்டவர்களால் அடுத்தவர்களுக்கு வழிகாட்டவே முடியாது என்று தெரிந்து கொள்கின்றான். சிவகுரு சிவசித்தனின் மும்முறைகளை அவன் கடைபிடிக்க ஆரம்பித்தவுடன் தன் உடல் கழிவுகள் நீங்கப்பெற்று, அவன் தன் அகத்தை உணர ஆரம்பிக்கின்றான். தன் அகத்தில் உள்ள ஒளி கொண்டு உலகை பார்க்க ஆரம்பிக்கின்றான். எல்லா நிலைகளிலும் உள்ள இரண்டும் கெட்டான் தன்மை அவன் கண்ணனுக்கு தெரிய ஆரம்பிக்கின்றது. தன் அகத்தில் இருக்கும் பொறி சிவகுரு சிவசித்தனே என்பதை புரிந்து கொண்டவுடன், அவர் வாசி தந்த நிழலில் சுறுசுறுப்புடன் அவர் விருப்பப்படி செயல் செய்து ஆனந்தம் அடைகின்றான்.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Leave a Reply