சிவகுரு சிவசித்தனை அகத்திலே நிலை நிறுத்தியே செயல் செய்கின்றார்கள்.

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

இன்றைய உலகம் போட்டியும் பொறாமையும் கலந்த ஒன்றாக இருக்கின்றது. தன்னுடைய வயிற்று பிழைப்பு நிமித்தமாவது எல்லோரும் ஏதாவது ஒரு செயல் செய்ய வேண்டியுள்ளது. நாம் என்ன தான் திறமையுடன் செயல்கள் செய்தாலும் பல நிகழ்வுகளில் நாம் தோல்வி அடைந்து சஞ்சலப்படும் நிலையே ஏற்படுகின்றது. இது எதனால்? நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு இறைவனின் கருணை துளியும் இல்லை என்பதாலேயே. இறைவனின் கருணை இல்லாத காரணத்தினாலேயே செயல் செய்யக்கூடிய திறமை இருந்தும் அதில் நாம் வெற்றி பெறக்கூடிய விவேகம் நம்மிடையே இல்லாமற் போனது.

சிவகுரு சிவசித்தனின் வாசியை பயின்றவர்களுக்கு அவர்களுடைய உடலில் உள்ள கழிவுகளின் வெளியேற்றம் காரணமாக அவர்கள் தங்களுடைய உடல் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் எந்த காரியம் செய்தாலும் சிவகுரு சிவசித்தனை அகத்திலே நிலை நிறுத்தியே செயல் செய்கின்றார்கள். சிவகுரு சிவசித்தனின் கருணையும் அவர் தந்த தேகம் கொண்டு செய்யப்பட்டு செயல்கள் எல்லாமே நற்செயல்கள் ஆகிவிடுகின்றன.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Leave a Reply