சிவகுரு சிவசித்தன் அவர்கள் கொடுக்கும் இந்த கருணை நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தன் திருநாமம் சொல்லும் முறையால் தன்னை நாடி வந்தவர்கள் எதை கேட்டாலும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார்கள். அது போல் எனக்கு தொண்டு செய்பவர்களுக்கு என் வாசியும் இயற்கையும் நொடிதோறும் பாதுகாப்பு அளிக்கும் என்று வாக்குகொடுத்து இருக்கிறார்கள்.

சிவகுரு சிவசித்தன் அவர்கள் கொடுக்கும் இந்த கருணை நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

நமது உணவு, நமது தண்ணீர் உபயோகம், நமது ஆடை, நமது தொழில் எல்லாமே சிவகுரு சிவசித்தன் அவர்கள் வகுத்துக் கொடுத்தபடி இருக்க வேண்டும். உணவு, தண்ணீர், முதலிய பழக்க வழக்கங்களை தன்னுடைய ஆரோக்கிய நிமித்தமாக மாற்றிக் கொள்ள தயாராக இருக்கின்றார்கள். ஆனால் ஆடை விஷயத்திலும் சரி தொழில் விஷயத்திலும் சரி அவர்கள் சிவகுரு சிவசித்தனின் விருப்பம் என்னவென்று அறிந்து செயல்பட தயாராய் இல்லை. உணவையும் தண்ணீரையும் முறைப்படுத்தி அதற்குரிய பலனைப் பெற்று விடுவதால் ஆடையும் தொழிலும் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று விவாதிக்கின்றனர். ஆடையாலும் தொழிலாலும் அடுத்தவர்களுக்கு தீமை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சாத்தியாமான ஒன்று தானா? சிந்தித்து பாருங்கள். பிறர் பாவம் செய்ய நமது ஆடையும் தொழிலும் காரணமாக இருக்கும் பொழுது நமக்கு எப்படி ஆரோக்கியம் கிடைக்கும்?

சிவகுரு சிவசித்தனை சரணடைந்து விட்டோம். உடனே தாமதம் இல்லாமல் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்கின்றனர். ஆரோக்கியம் கிடைக்க தாமதம் ஏற்படும் பொழுதோ அல்லது கழிவுகள் வெளியேற்றத்தை எதிர்மறையாக புரிந்து கொண்டோ தன் மீதே அவ நம்பிக்கை கொள்கின்றோம். சிவகுரு சிவசித்தனின் வாசி தரும் இந்த சோதனையை கடந்து சென்றால் மட்டுமே முழுமையான ஆரோக்கிய வசப்படும். கடந்து செல்ல சிவகுரு சிவசித்தனின் திருநாமம் உறுதுணையாக இருக்கும். அதை விடுத்து ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை குறித்து கவலைப்பட்டு கொண்டே இருந்தால் மேற்கொண்டு ஆரோக்கிய குறைபாடும் பலவீனமும் உண்டாகும். மனச்சோர்வுக்கும் அவ நம்பிக்கைக்கும் எக்காரணத்தைக் கொண்டும் இடங்கொடுக்கக் கூடாது. மனச்சோர்வும் அவ நம்பிக்கையும் நீங்க சிவகுரு சிவசித்தனின் திருநாமமே துணை. சிவகுரு சிவசித்தனின் கருணையானது அவர் மேல் முழு நம்பிக்கை வைத்தவர்கள் மேல் இருக்கின்றது. சிவகுரு சிவசித்தன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் இன்றைய காலகட்டத்திற்கான வாழ்வியல் முறையை கடைப்பிடித்து ஆனந்தம் பெறுவோமாக!

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Leave a Reply