சிவசித்தன் தனி மனிதனின் தன்னிலை உணர வைக்கிறார் வாசியோக கலையால்!

வாசியோகம் என்பது சொல்லில் அடங்காத ஒரு பேரின்ப உணர்வு நிலையை எட்டும் தன்மை உடையது.

அந்த உணர்வானது மனிதருள் ஒரு நிலையான தன்மையை உணரச் செய்கிறது.

வாசியோகக்கலை என்னும் உயிர்க்கலை சிவபெருமானால் உருவாக்கப்பட்ட கலை என்னும் குறிப்புகள் இணையதளத்தில் வெளிவந்துள்ளன. எனினும் வாசியோகக்கலை உலகில் எங்கும் முறையாகக் கற்றுதரப்படவில்லை என்பது உண்மை.

ஒரு மனிதனின் உடலைப் பார்த்தவுடன், அவனது உடலின் நாடிகளை ஆராயும் தன்மைப் பெற்ற ஒருவரே வாசியோகக் குருவாக முடியும். அவ்வாறு நாடி பார்க்கும் சூட்சுமங்கள் முழுமையாக உணர்ந்தவரை “சிவசித்தன்” என்பார் சிவபெருமானார்.

ஒரு மனிதனை நேரில் பார்க்காமலேயே அவருடைய நாடிகளை கண்டறியக்கூடிய அளவிற்கு வாசியோகப் பயிற்சிகள் மூலம் தன்னைத் தானே நித்தமும் மெருகேற்றும் வண்ணம் உயர்ந்தது வாசியோகக் கலையாகும்.

வாசியோகம் எனும் யோகப்பயிற்சி பலநிலைகளை உள்ளடக்கியதாகும். அந்நிலைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பிற யோகக்கலைகள் போல் அனைவருக்கும் ஒரேவிதமான பயற்சிகள், சிந்தனைகள் வாசியோகத்தில் கிடையாது. தனிமனிதப் பயிற்சி, அவனவனுடைய சிந்தனை, அவனவனுடைய உணர்வு என அனைத்துமே தன்னிலை சார்ந்த விசயங்களாகவே இருக்கும்.

ஆம்! சிவகுரு சிவசித்தர், தான் கற்பிக்கும் வாசியோகக்கலை மூலம் ஒவ்வொரு தனி மனிதனையும் தன்னிலை உணர வைக்கிறார்.