வாழ்வு முறை

  1. வாசியோகப் பயிற்சிகளை அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குருகுலத்திற்கு வந்து செய்து விட வேண்டும்.
  2. வாசியோகப் பயிற்சிகள் செய்யத் தொடங்கும் முன்பு 50 மில்லி நீர் பருகிவிட்டு பயிற்சிகள் செய்யவும். இடை இடையே நீர் பருகுவது கூடாது.
  3. பயிற்சிகள் முடித்த பின்னர் 3 நிமிடம் கழித்த பின்னரே மீண்டும் 50 மில்லி நீர் மட்டுமே பருகிட வேண்டும்.
  4. அதன் பின்னர் 30 கருவேப்பில்லை சாப்பிடவும், 3 நிமிடம் கழிந்த பின்பு 5 சின்ன வெங்காயம் சாப்பிடவும், மறுநாள் கொத்தமல்லி 15 + புதினா இலை 15 சாப்பிடவும். 3 நிமிடம் கழித்து 5 சின்ன வெங்காயம் சாப்பிடவும்.
  5. இதன் பின்பு 10 நிமிடம் கழித்து திங்கள், வெள்ளிக் கிழமை தேங்காய்சில் ஒன்று மட்டும் சாப்பிடவும்.
  6. பெண்கள் மட்டும் காலை 07.30 மணிக்கு ஒரு டம்ளர் பால் + 3 பேரிச்சம்பழத்துடன் சேர்த்து (3 பேரிச்சம்பழம், பால் காயச்சும்பொழுது போட்டு கண்டிப்பாக காய்ச்சவும்) பருக வேண்டும்.(சீனி சேர்க்கக் கூடாது.)
  7. ஆண்கள் காலை 07.30 மணிக்கு டீ அல்லது பால் சாப்பிடவும்.
  8. டீ / பால் சாப்பிடும் நேரங்களில் பாலில் சத்து மாவு சேர்த்து சாப்பிடுவது இருபாலருக்கும் நலம் பயக்கும்.
  9. 2 அத்திப்பழம் / 10 உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்), காலையில் 7.30 மணிக்கு சாப்பிட்டபின் சூடான பால் பருகவும்.