உணவு முறை

  1. சிவகுரு சாப்பிடக் கூடாது என்று கூறியுள்ள உணவுகளை ஒரு முறை சாப்பிட்டால் கூட உன் உடம்பின் அணுக்கள் செயல்பாடு குறைந்துவிடும்.
  2. தினமும் மூன்று வேளை /  இரண்டு வேளை(சிவசித்தன் உங்களுக்கு வகுத்தவாறு ) சாப்பிடுகிறேன் என்று சிவகுருவிடம் உறுதி கூறிவிட்டு ஒரு வேளை நீ சாப்பிடாமல் இருந்தால் கூட உன் உடலின் அணுக்கள் பாதிக்கப்படும்.
  3. தினமும் மூன்று/இரண்டு  வேளை உணவும், வாசியோகப் பயிற்சியும் ஒரு வருடம் தொடர்ச்சியாக செய்தால் உன் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உன் அணுக்கள் புத்துணர்வு அடையும். அதில் தவறு செய்தால் சிவகுரு கூறும் ஒழுக்கத்திலிருந்து தவறி பாவம் செய்கிறாய்.
  4. உணவு நேரம் குறித்து சிவகுருவின் சரியான வழிகாட்டுதல் இருந்தும், நேரம் தவறி உணவு உண்டு.
  5. அதனால் உண்டாகும் உடல் பிரச்னைக்கு நீ சிவகுருவிடம் தீர்வு கேட்பது, தொலைபேசியில் நேரம் காலமின்றி தொடர்பில் வந்து சிவகுருவை தொந்தரவு செய்வதும், நம் அருள் கடாச்சத்திற்கும் சோதனை ஏற்படுத்துவது ஆகும்.
  6. உனக்கான ஒழுக்கத்திலிருந்து தவறு செய்வதாகும். தவறான உணவு (நேர) பழக்கம் ஒழுக்கத்திற்கான முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகும். எனவே, முறைகேடான உணவு உண்ணும் “பாவச் செயலை” செய்யக் கூடாது.