சிவசித்தனின் 1009 பாடல்கள் – 921 – 930

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 921. வலிநோக்கி வரும்வேலையின் வலியதனை பின்வழிநோக்கி வளியாலே ஓடச்செய்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   922. அற்பதிகம் அங்கசுகம் தாண்டியே ஆன்மீகம் அளித்திட்ட ஆனந்தமே ஓம் சிவய சிவசித்தனே!   923. சொல்லிய சொல்லுள்ளே உண்மையின் சொரூபாய் ஒழிந்திருந்து ஒளிர்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   924. சூலத்தின் சூட்சுமத்தை எம்தேகத்துள் உணர்த்தியே இடவல சுழிமுனையை உணர்தினீரே ஓம் சிவய சிவசித்தனே! …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 911 – 920

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 911. கண்டும் காணமால் இருந்தேனே ஒன்றைக்கொடுத்தே கண்டதை உணர்த்தி சிலிர்க்கச்செய்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   912. ஊற்றுநீர்போல ஊரிடத்தில் இல்லாறே ஆற்றுநீர்போல அனைத்திலும் பாய்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   913. ஊரையும்மறவேன் பெயரையும்மறவேன் உருவமும்மறந்தேனே ஒருபோதும் உனைமறவேனே ஓம் சிவய சிவசித்தனே!   914. ஈராறு திங்களிலே அங்கமதை புதிதாக்கி காலாலே புனிதமாகச் செய்தவரே ஓம் சிவய சிவசித்தனே! …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 901 – 910

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 901. தன்னைத்தானே அழித்திடுவோமே நின்னைத்தவறாக எண்ணுகிறவரது எண்ணத்தின் தன்மையே ஓம் சிவய சிவசித்தனே!   902. இம்மையையும் மறுமையையும் இனிதாக்கி நல்குகின்ற இருமையின் தன்மையே ஓம் சிவய சிவசித்தனே!   903. இணைந்திட்டே அறவழியில் இல்வாழ்க்கை நடத்துகின்ற நல்வாழ்க்கை அளித்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   904. பேசா திருந்தோமே உம்முன்னே பலர்நன்னயம் பேசுகின்ற பெரும்பேறு பெற்றோமே ஓம் சிவய சிவசித்தனே! …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 891 – 900

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 891. முறையில்லா வாழ்வதனை முன்னிருந்ததுபோலவே செவ்வைப் படுத்திட வந்தவுயர்வே ஓம் சிவய சிவசித்தனே!   892. உயிர்வாழ்வதற்கு ஏற்றதாய் உடலை உருவகப்படுத்திய உத்தமமான திருவுருவுவே ஓம் சிவய சிவசித்தனே!   893. நிழலாக காத்துநின்றருளி நித்தம்நித்தம் காத்தருள்கின்ற சுயம்பான சுடரொளியே ஓம் சிவய சிவசித்தனே!   894. எண்ணிலடங்காத குணங்கள் பலவற்றைக் கண்டவரே கண்டும் அகம்தளராதவரே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 881 – 890

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 881. நல்லவரெல்லாம் மென்மேலும் பெருகிவரும் புனிதஇடத்தின் புனிதரே மூலவரே ஓம் சிவய சிவசித்தனே!   882. நல்காரியங்கள் நிறைவேறும் நல்லகாலம் வந்திடுமே உம்அருள் கூடுகையிலே ஓம் சிவய சிவசித்தனே!   883. எல்லாவற்றிலும் புலனுக்கெட்டாது உறைந்திருந்து நிறைந்திருக்கும் சர்வாந்தர்மியே சர்வமே ஓம் சிவய சிவசித்தனே!   884. யாவுள்ளும் நிறைந்திட்டு யாவரையும் தலைமையேற்று வழிநடத்தும் சர்வேசுவரனே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 871 – 880

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்   871. ஊழிமுதல்வனாய் தோன்றிட்டே யுகமுடிவில் தோன்றுகின்ற தீயவைதனை தூளாக்குபவரே ஓம் சிவய சிவசித்தனே!   872. விரிந்திட்டே பரந்திட்டே நின்றொளிரும் நிலையான பேரொளியான ஒளிப்பிளம்பே ஓம் சிவய சிவசித்தனே!   873. தெளிவோடு கூடியமிகுதியான உறுத்தன்மையோடு அழுத்தம் திருத்தமாகவும் செயல்படும் செயல்பாடே ஓம் சிவய சிவசித்தனே!   874. வியத்தகுகுணங்கள் நிறைந்தவரே வீரியமிக்க செயல்கள் பலவற்றை அருள்பவரே …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 861 – 870

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்   861. வெறுமையுற்றவராய் இருந்தோமே பெருமையுற்றவராய் மாறினோமே ஒருமையுற்றவரே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!   862. உள்ளுள்ளே ஒன்றுமில்லாதிருந்தோம் உம்மை உள்வைத்தோம் உயர்பொருளாய் ஆகிவிட்டோமே ஓம் சிவய சிவசித்தனே!   863. தீயவைகளைத் தடுப்பாரின்றி தவித்தோமே தூயவராகி தடுத்தாட் கொண்டவரே ஓம் சிவய சிவசித்தனே!   864. வெளிக்காட்டாத திருவுருவமே சலிப்படையாத குருவுருவே யாவும் உள்வைத்து ஒளிர்பவரே …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 851 – 860

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 851. அறம்பொருள் இன்பத்தை அறியவைத்து அளித்திட்ட அரியவரே ஓம் சிவய சிவசித்தனே!   852. கைகூப்பி வணங்குதலுக்கு உரித்தானவரே எரித்தாளும் நெருப்பாற்றரை எடுத்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   853. மூலாதாரத்திலே மூலமாயுள்ள அரவவடிவ சக்தியதை அறியச்செய்த அம்பலமே ஓம் சிவய சிவசித்தனே!   854. வயிறோட்டியே இருப்பவரே வயதாற்றலின் தன்மையினை கட்டுள்ளே வைத்தவரே ஓம் சிவய சிவசித்தனே! …