ஆதியும் அந்தமும் சிவகுருசிவசித்தனே! பிறவிப் பிணி தீர்த்து பிறப்பறுக்கும் பெருங்கலையாம்! பிறைசூடும் பெருமான் அருளிச்செய்த கலையாம்! எம்குருவான சிவசித்தன் கற்றுணர்ந்து கற்றருளும் வாசியெனும் உயிர்க்கலையே அக்கலையாம்! சிற்றின்ப சேற்றிலே சிக்கித் தவித்த சிற்றறிவான எமை பேரறிவான பேராற்றல் கொண்ட பிறை சடையானை உயிர்க்கலையாம் வாசிகலையால் உள கூட்டதிலே ஒளிரச்செய்த மெய்யறிவு கொண்ட எம் ஆசானாம் சிவசித்தனை பணிவுடன் பணி மனமே! சூரிய விளக்கு போல் வாசியோக குருகுலம் இருக்கையிலே! சுடர்விளக்கு …
சிவசித்தனின் “முதலும் முடிவும்”
சிவகுருவே சரணம்! “முதலும் முடிவும்” சிவகுரு சிவசித்தனின் வாசி கற்கையிலே! ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின் சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே! எமை காக்கும் சிவகுருவே! சிவசித்தனே! உம் திருவடி பணிகின்றேனே! இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திருஉருவம் தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில் ஓதும்போது …
சிவகுருவே சரணம்! “முதலும் முடிவும்” சிவகுரு சிவசித்தனின் வாசி கற்கையிலே! ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின் சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே! எமை காக்கும் சிவகுருவே! சிவசித்தனே! உம் திருவடி பணிகின்றேனே! இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திருஉருவம் தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில் …

108 பாடல்கள் – ‘அக்’ வரிசைப் பாடல்கள்
சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்
(108)
அக்படைத்தவனின் பிரபஞ்சம் இதுவே
இதனை அறிய உலகில் மையம் ஒன்றே
அக்துவே எம் ஆசானின் சிந்தாமணி
ஸ்ரீவில்வ வாசியோக மையமே!
சிவகுருவின் பக்தன்,
ம.சண்முக பாண்டியன்,
வாசியோக வில்வம் எண்: 10 11 001

108 பாடல்கள் – ‘ஒள’ வரிசைப் பாடல்கள்
சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்
(107)
ஒளடதம் தேவையில்லை ஆதியின் வழிவந்த
வாசியதை செம்மையோடு எம்முள் செம்மையுறுத்தி
செங்கண்ணனை எம்மனக்கண்ணில் எம்முள் எழச்செய்த ஏகனே
எல்லாம் வல்ல சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!
சிவகுருவின் பக்தன்,
ம.சண்முக பாண்டியன்,
வாசியோக வில்வம் எண்: 10 11 001

108 பாடல்கள் – ‘ஓ’ வரிசைப் பாடல்கள்
சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (106) ஓதும் மந்திரத்தின் பொருளறிந்து ஓதுக மந்திரமாய் வந்ததெல்லாம் மனதை மாற்றும் மாற்றமாய் ஆகாது ஒவ்வொரு எழுத்தின் வடிவதனை வாசிவழி ஏற்றியே சிவகுருவின் மந்திரத்தை செப்பிப்பார் செம்மையுறுமே உம்மனமே! சிவகுருவின் பக்தன், ம.சண்முக பாண்டியன், வாசியோக வில்வம் எண்: 10 11 001
108 பாடல்கள் – ‘ஒ’ வரிசைப் பாடல்கள்
சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (102) ஒன்றேகுலம் ஒருவனே தேவன் எனும் கூற்றை மெய்கூற்றாக்கும் செயலை எம்மையத்தில் காணலாகுமே ஸ்ரீவில்வமையதில் மதபாகுபாடுகள் மறந்து சகலமும் சிவகுரு சிவசித்தரென்று பணியும் பணிவைக்காணலாமே! (103) ஒருமையுற்ற எண்ணத்தோடு ஓம்காரத் தன்மையான சிவகுருவின் வாசியைப் பயிலும்போது உன்னுள்ளுள்ள கருமைஎனும் தொக்கமது தோற்றுவிடுமே தோய்வான எண்ணமதுவுமே மாய்ந்து போகுமே! (104) ஒருவராய் இருந்து எண்ண வெறுமையதை ஒதுக்கியே! அகத்துள் …
108 பாடல்கள் – ‘ஐ’ வரிசைப் பாடல்கள்
சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (96) ஐந்தும் அடங்கியே அவர்முன் புண்ணியமே முந்திவரும் முருண்கெட்ட எண்ணமதும் பிந்தியே ஓடுமே! வந்திறங்கி வாசியை உன்னுள்ளே அருளிய சிவகுரு சிவசித்தர் முன்னே! (97) ஐயம் கொள்ளாதே வாசிகலையை எண்ணியே மெய்யும் இவரன்றோ மெய்க்குள் பொய்யொதுக்கும் மெய்யும் இதுவன்றோ! பாழ்கெட்ட மனிதருக்கு பலமளிக்கும் சொர்க்கமும் ஸ்ரீவில்வவாசியோக மையமன்றோ! (98) ஐயனாம் சிவகுரு சிவசித்தரை துதிக்கையிலே துயில்கொள்ளுமே …