ஒருநாமம் ஓருருவம் ஒன்றுதான் என்பாய்

  ஒருவனாய் படைத்தேன் உலகை ஒருவனாய் அனைத்தும் ஆனேன் அனைத்தும் யாம் ஒருவனே என்றேன் எமை ஒருவனும் அறியா ஓராண்டு எம்வாசிக்கலை செய்து அனைத்தும் சிவசித்தனாய் உணர்வாய், ஒருநாமம் ஓருருவம் ஒன்றுதான் என்பாய் . “சிவசித்தன்” உண்மையாய் இருங்கள் உள்ளகமதில் இறைவன் உண்டு!

Learn More

சிவசித்தன் உத்தரவு

சிவகுரு சிவசித்தன் உத்தரவு:

      சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, உடல் நலன் பெற வேண்டி, மதுரை சிந்தாமணி ஸ்ரீவில்வம் வாசியோக மையம் வரும் அனைவருக்கும் சிவகுரு சிவசித்தன் பல விதிமுறைகளை விதித்துள்ளார். அவற்றில் ஒன்று முறையாக, ஒருவருடம் முழுதும் தவறாமல் தினமும் வாசியோகப் பயிற்சிகள், உணவு முறைகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றி, தேகநலம் காணும் வரை கோவில் செல்லக் கூடாது என்பதாகும்.

உணவு முறை

 1. சிவகுரு சாப்பிடக் கூடாது என்று கூறியுள்ள உணவுகளை ஒரு முறை சாப்பிட்டால் கூட உன் உடம்பின் அணுக்கள் செயல்பாடு குறைந்துவிடும்.
 2. தினமும் மூன்று வேளை /  இரண்டு வேளை(சிவசித்தன் உங்களுக்கு வகுத்தவாறு ) சாப்பிடுகிறேன் என்று சிவகுருவிடம் உறுதி கூறிவிட்டு ஒரு வேளை நீ சாப்பிடாமல் இருந்தால் கூட உன் உடலின் அணுக்கள் பாதிக்கப்படும்.
 3. தினமும் மூன்று/இரண்டு  வேளை உணவும், வாசியோகப் பயிற்சியும் ஒரு வருடம் தொடர்ச்சியாக செய்தால் உன் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உன் அணுக்கள் புத்துணர்வு அடையும். அதில் தவறு செய்தால் சிவகுரு கூறும் ஒழுக்கத்திலிருந்து தவறி பாவம் செய்கிறாய்.
 4. உணவு நேரம் குறித்து சிவகுருவின் சரியான வழிகாட்டுதல் இருந்தும், நேரம் தவறி உணவு உண்டு.
 5. அதனால் உண்டாகும் உடல் பிரச்னைக்கு நீ சிவகுருவிடம் தீர்வு கேட்பது, தொலைபேசியில் நேரம் காலமின்றி தொடர்பில் வந்து சிவகுருவை தொந்தரவு செய்வதும், நம் அருள் கடாச்சத்திற்கும் சோதனை ஏற்படுத்துவது ஆகும்.
 6. உனக்கான ஒழுக்கத்திலிருந்து தவறு செய்வதாகும். தவறான உணவு (நேர) பழக்கம் ஒழுக்கத்திற்கான முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகும். எனவே, முறைகேடான உணவு உண்ணும் “பாவச் செயலை” செய்யக் கூடாது.

சிவசித்தனின் திருநாமம்


மேலே குறிப்பிட்டு உள்ள சிவசித்தனின் திருநாமத்தை, ஒவ்வொரு வரியையும் 10 முறை கண்கள் மூடி, கைகள் வணங்கி, அத்தில் கூறவும்.

வாழ்வு முறை

 1. வாசியோகப் பயிற்சிகளை அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குருகுலத்திற்கு வந்து செய்து விட வேண்டும்.
 2. வாசியோகப் பயிற்சிகள் செய்யத் தொடங்கும் முன்பு 50 மில்லி நீர் பருகிவிட்டு பயிற்சிகள் செய்யவும். இடை இடையே நீர் பருகுவது கூடாது.
 3. பயிற்சிகள் முடித்த பின்னர் 3 நிமிடம் கழித்த பின்னரே மீண்டும் 50 மில்லி நீர் மட்டுமே பருகிட வேண்டும்.
 4. அதன் பின்னர் 30 கருவேப்பில்லை சாப்பிடவும், 3 நிமிடம் கழிந்த பின்பு 5 சின்ன வெங்காயம் சாப்பிடவும், மறுநாள் கொத்தமல்லி 15 + புதினா இலை 15 சாப்பிடவும். 3 நிமிடம் கழித்து 5 சின்ன வெங்காயம் சாப்பிடவும்.
 5. இதன் பின்பு 10 நிமிடம் கழித்து திங்கள், வெள்ளிக் கிழமை தேங்காய்சில் ஒன்று மட்டும் சாப்பிடவும்.
 6. பெண்கள் மட்டும் காலை 07.30 மணிக்கு ஒரு டம்ளர் பால் + 3 பேரிச்சம்பழத்துடன் சேர்த்து (3 பேரிச்சம்பழம், பால் காயச்சும்பொழுது போட்டு கண்டிப்பாக காய்ச்சவும்) பருக வேண்டும்.(சீனி சேர்க்கக் கூடாது.)
 7. ஆண்கள் காலை 07.30 மணிக்கு டீ அல்லது பால் சாப்பிடவும்.
 8. டீ / பால் சாப்பிடும் நேரங்களில் பாலில் சத்து மாவு சேர்த்து சாப்பிடுவது இருபாலருக்கும் நலம் பயக்கும்.
 9. 2 அத்திப்பழம் / 10 உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்), காலையில் 7.30 மணிக்கு சாப்பிட்டபின் சூடான பால் பருகவும்.

யார் சிவசித்த வாசிதேக கண்ணன் ?

மனிதர்கள் தன் எண்ணத்தை அறிந்தும், அறியாமலும் மறைப்பதை உணர்ந்த சிவசித்தன். அதை வெளிக் கொண்டுவர சிவசித்த வாசிதேக கண்ணனாய் ரூபம் எடுத்தானே !

மேலும் படிக்க

சிவசித்தனின் மனிதநலனுக்காக எடுத்த அவதாரங்கள்

சிவகுரு

சிவசித்தன்

சிவசித்த வாசிதேக கண்ணன்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

(108)

அக்படைத்தவனின் பிரபஞ்சம் இதுவே

இதனை அறிய உலகில் மையம் ஒன்றே

அக்துவே எம் ஆசானின் சிந்தாமணி

ஸ்ரீவில்வ வாசியோக மையமே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

(107)

ஒளடதம் தேவையில்லை ஆதியின் வழிவந்த

வாசியதை செம்மையோடு எம்முள் செம்மையுறுத்தி

செங்கண்ணனை எம்மனக்கண்ணில் எம்முள் எழச்செய்த ஏகனே

எல்லாம் வல்ல சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

(106)

ஓதும் மந்திரத்தின் பொருளறிந்து ஓதுக

மந்திரமாய் வந்ததெல்லாம் மனதை மாற்றும் மாற்றமாய்

ஆகாது ஒவ்வொரு எழுத்தின் வடிவதனை வாசிவழி

ஏற்றியே சிவகுருவின் மந்திரத்தை செப்பிப்பார் செம்மையுறுமே உம்மனமே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

 

(102)

ஒன்றேகுலம் ஒருவனே தேவன் எனும் கூற்றை

மெய்கூற்றாக்கும் செயலை எம்மையத்தில் காணலாகுமே

ஸ்ரீவில்வமையதில் மதபாகுபாடுகள் மறந்து சகலமும்

சிவகுரு சிவசித்தரென்று பணியும் பணிவைக்காணலாமே!

 

(103)

ஒருமையுற்ற எண்ணத்தோடு ஓம்காரத் தன்மையான

சிவகுருவின் வாசியைப் பயிலும்போது உன்னுள்ளுள்ள

கருமைஎனும் தொக்கமது தோற்றுவிடுமே

தோய்வான எண்ணமதுவுமே மாய்ந்து போகுமே!

DSC02283

(104)

ஒருவராய் இருந்து எண்ண வெறுமையதை

ஒதுக்கியே! அகத்துள் பதுங்கிக் கிடங்கும்

பாழ்பட்ட எண்ணமதையும் பாழாக்கியே மேலினும்

மேலான எண்ணமதை காயத்தில் உணர்த்தும் காரணியே சிவகுரு சிவசித்தர்!

 

(105)

ஒடுங்கும் உடலதுவுமே உடலது ஒடுங்க

ஓங்குமே நல்எண்ணமதுவே தேங்கும் கழிவதனை

தினம்தினம் வெளியேற்ற மனமது நல்வண்ணம்

மாறியே நாரணனும் நமச்சிவமும் நாயகன் சிவகுருவின் உள்ளே என்பதை அறிவாயே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

 

 

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

 

(96)

ஐந்தும் அடங்கியே அவர்முன் புண்ணியமே

முந்திவரும் முருண்கெட்ட எண்ணமதும்

பிந்தியே ஓடுமே! வந்திறங்கி வாசியை

உன்னுள்ளே அருளிய சிவகுரு சிவசித்தர் முன்னே!

 

(97)

ஐயம் கொள்ளாதே வாசிகலையை எண்ணியே

மெய்யும் இவரன்றோ மெய்க்குள் பொய்யொதுக்கும்

மெய்யும் இதுவன்றோ! பாழ்கெட்ட மனிதருக்கு

பலமளிக்கும் சொர்க்கமும் ஸ்ரீவில்வவாசியோக மையமன்றோ!

 

(98)

ஐயனாம் சிவகுரு சிவசித்தரை துதிக்கையிலே

துயில்கொள்ளுமே தீயஎண்ணமதும், காயப்

பிணி களைந்து தூய வாழ்வளிக்கும் தூயவரே

உம்மந்திரத்தை சொல்லுகையில் பொல்லாங்கு ஓடிவிடுமே!

2 (252)

(99)

ஐவரும் வந்தே சிவகுரு ஐயனைப் பணிந்தே எம்ஆசான்

பணித்த பணிக்கே அண்டமுள்ளும் பிண்டமுள்ளும்

செயல்படுமே! அனைத்துலக உயிரினங்களும் வந்துபணியுமே

சிவகுரு சிவசித்தரை அனுதினமும் வந்தே!

 

(100)

ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்றவளும்

அகம் மகிழ்வாள் தன்பிள்ளை வாசிபயின்று

நல்வாழ்வு வாழும்போதே பொய்மையான

மானிடர்கள் மத்தியிலே மெய்மையாய் வாழச்செய்யுமே

சிவகுருவின் வாசிகலையே!

 

(101)

ஐங்கழிவு வெளியேறுமே அங்கமுள் வாசியேறுகையில்

முன்பிருந்த சீர்கெட்ட பண்பதுமே நல்லுறுமே

கழிவதை களைய நலிவுறுமே தீயஎண்ணமதுவே

பொலிவுறுமே புத்துணர்வதுமே அனைத்தும் கழிவாலே!

இதுவே சிவகுருவின் கூற்றே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

 

(90)

ஏறிவரும் உடலில் உருவில்லா வாசியது மாறியதே

மாற்றங்களை நல்குமே! ஓடிவரும் துயரங்களும்

துன்பங்களும் துவண்டு கட்டுப்பட்டே இருக்கும்

கால்அறிந்து கால்நல்கும் கால்(ல)தேவன் சிவகுரு சிவசித்தர் முன்னே!

 

(91)

ஏடுபார்த்து எதையும் செய்ய மாட்டான்

வாசியோகம் பயில்பவன் காலத்தை நிர்ணயிக்கும்

காலதேவன் சிவகுரு சிவசித்தரின் திருவடி

நிழலில் வந்துபுகுந்தோருக்கு நவகோளும் நன்மையளிக்குமே!

 

(92)

ஏகனாய் நின்று எல்லோர்க்கும் வாழ்வளிக்கும்

ஈசனன்றோ எம்ஆசான் சிந்தாமணி சிவகுருசிவசித்தர்

பாசம் ஒதுக்கி பற்றை ஒதுக்கி பணம்காசை ஒதுக்கி

மனிதசுவாசம் ஒன்றே என்றெண்ணும் நல்நேசறன்ரோ சிவகுரு சிவசித்தர்!1 (1598)

 

(93)

ஏவல், பிணி எல்லாமே அறுந்தோடுமே

அசைவமுண்ணும் ஆவலதனை அடக்கியே

ஐம்புலனையும் ஒருங்கிணைத்து சிவகுரு சிவசித்தர்

அருளும் வாசிவழியே செலுத்தினால் வசப்படும் யாவையுமே!

 

(94)

ஏற்றிடுவார் எண்ணமதிலே தூயஎண்ணமதை

பார்த்திடா பரம்பொருளை பரப்பிடுவார்

உம்உடல் அணுமுழுவதுமே அணுவைப்பிளந்து

அணுவுக்குள் அணுவாய் இருந்து ஒளிரூபம்தந்திடுவார் சிவகுரு சிவசித்தர்!

 

(95)

ஏங்கித் தவித்திடுமே சிவகுருசிவசித்தரை விட்டு

விலகிய மனிதகுலமே எல்லாம் அறிந்த

சிவகுருவை ஏதும் அறியாது விலகிவிட்டோமே

மாயையதில் சிக்குண்டு மதிமயங்கிவிட்டோமே என்றே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம் !

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

DSC02284

(75)

எல்லையில்லா பேரின்பமதை நல்குகின்ற நற்கலையே

தொல்லையதை தொலைத்துவிடும் தொன்மையான

வாசிகலையை உம்காயமுள்ளே எற்றுகையிலே

வாசியை உம்முள்ளேற்ற சிவகுரு சிவசித்தரை உம்நினைவிலேற்றப்பா!

 

(76)

எதையும் எதிர்பாராமல் எல்லோருக்கும்

நலமளித்து பல்லோரையும் பாரினிலே பக்குவப்

படுத்தி வல்லோனாம் வாசிநாதனை உண்மையாய்

உணரச் செய்திடுவார் சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!

 

(77)

எக்குலமாய் இருந்தாலும் எம் ஆசான்

சிவகுரு சிவசித்தர் முன்னே சிவகுலமே! மதபேதம்

இங்கில்லை மக்களுக்கு பிணிபோக்கி சுகம்

தரும் சூத்திரதாரியாம் சிவகுருமுன்னே சகலமும் ஒன்றே!

 

(78)

எட்டாக் கனியதை எட்டிப்பறிக்கும் மனிதன்

செயல்போல அசைவமதை ஒதுக்காமல் சிவகுருவின் இறைகலை

வாசியைப் பயில நினைக்கும் மானிடனே! கிட்டாது

ஒருபோதும் வாசியெனும் அமுதக்கனியே!

 

(79)

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்

என்று கூறியவர்கள் மத்தியிலே

எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்

எனும் மெய்கூற்றை கூறிய மெய்யரே சிவகுரு சிவசித்தர்!

 

(80)

எள்ளளவும் அச்சம் கொண்டு வாசிகலையை

பயிலாதே! அணுவைப் பிளந்து அணுவிற்கு ஆற்றல்

கொடுக்கும் பேராற்றலே எம் பெருமான்

சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே! மானிடனே இதை உணர்வாயாக!

 

(81)

எங்கில்லா விதிமுறை இங்கிருக்க இதை

ஏற்று பின்பற்ற வாழ்க்கையதின் துன்பங்களும்

பின்னே போகுமே! பொன்னான தருணமதை

பொன்னவன் சிவகுருவை பின்பற்றி வாழ்வை நன்றாக்கு மானிடனே!

 

(82)

எண்ணும் எண்ணமதாலே யாவர்க்கும் இன்பமும்

துன்பமும் வருவதன்றி பிறரால் வாராது

எண்ணமதில் வன்மைநீக்கி பக்குவத்தன்மை தந்து

பாதுகாக்கும் செயலைச் செய்வது சிவகுருவின் வாசிகலையே!

 

(83)

எமையாண்டு எம்முள்ளே உறைந்திருந்த பகைமை

எண்ணமதை பறந்தோடச்செய்து கயமை எண்ணமதை

காணமால் போகச் செய்து இச்சை எண்ணமதை

பக்குவப்படுத்தி இனிதான வாழ்வுதந்த முத்தரே சிவகுரு சிவசித்தரப்பா!

 

(84)

எழுத்தறிவு கொண்டேரெல்லாம் எல்லாம்

அறிந்தவராகார். அதையும் தாண்டி அங்கமுள்ளே

ஆதியான அற்புதக்கலை வாசியறிவை பயின்றோன்

முன்னே எவரும்பணிவர்! உண்மையை உணர்ந்து பார் மானிடனே!

 

(85)

எரிந்துவிடும் மருந்தெனும் தொக்கமது எம்ஆசான்

சிவகுரு சிவசித்தரின் அருட்பார்வை பட்டவுடனே

எந்தமந்திரமும் செல்லாது! மாந்தீரகமும் இங்கு

செல்லாதே! சிவகுருவின் சொல்வன்மை பொசுக்கிடுமே யாவற்றையுமே!

 

(86)

எதையும் எதிர்பார்த்து சேவையாற்றாதே சிவகுரு சிவசித்தர்க்கு!

முதன்மை இடத்தை கொடுக்குமே நீ செய்கின்ற

சேவையை உண்மையான உள்ளதோடு செய்கையிலே!

இறைதன்மையை அளித்து இதமான வாழ்வைநல்குமே வாசிகலையே!

 

(87)

எவருடனும் ஒப்பிடாதே ஒப்பில்லா மாமணியாம்

மதுரையம்பதி பெருமான் சிந்தாமணி சிவகுரு சிவசித்தனே!

ஆதவன்செயல்போல் அங்கத்திற்கு வாசியொளி புகட்டும்

பூவுலகப் புண்ணியரே சிவகுரு சிவசித்தர்!

 

(88)

எவரும் உணர்த்தா உள்உணர்வாம் உண்மை

உணர்வான இறையுணர்வை உலக இயக்கமான

வாசியாலே உமக்கு உணர்த்துவார்! உண்மை

இங்கிருக்க பொய்மையைத் தேடிப் போகாதே!

 

(89)

எவர்வாக்கும் எம்சிவகுரு சிவசித்தர் வாக்கிற்கு

ஈடுஇணையாகாதே! ஊடாடும் வாசியினை

உள்ளார்ந்த உணர்வோடு உணர்கையிலே!

சிவகுருவின்சொல் வாக்கை அறிந்திடுவாயே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

2 (253)

(64)

ஊமை கண்ட கனவு போல வாசியறிந்தேன்

படைத்தோனை தம் அகமதிலே அறிந்தனன்

இவ்விரு செயலும் அவனவன் அங்கம்மூலம்

அறிய வேண்டும் பிறர் சொல்லி உணரார்!

 

(65)

ஊனை அகற்றி உண்ணும் உணவை சிவகுரு

சிவசித்தர் சொல் வண்ணம் அறிந்தொதுக்கி

அன்றாடம் வாசியேற்றோன் அணுவதனை

அறிந்து ஆதியை அகமுள்ளே அறியன்!

 

(66)

ஊனை உருக்கி உள்ளுள் உத்தமவொளி

பெருக்கி வித்தகராம் ஸ்ரீ வில்வம் வாசியோக மைய

சிவகுரு சிவசித்தரவர் போதித்த வாக்கதனை

வளியோடு (வாசி) சேர்ந்து ஏற்பவன் எந்நாளும் நலமுறுவான்!

 

(67)

ஊக்கம் தந்து உள்ளுள் ஆக்கம் தந்து

தேக்கமான கழிவதனை தெறித்தோடச் செய்து

இறைதாக்கமதை இயக்கிடுமே இறைகலை

வாசியை இறைவடிவமான சிவகுருவின்மூலம் அறியும்போதே!

 

(68)

ஊடாடும் வாசியினை உணர்விலே

உணர வைத்து உணர்வதனை உடலெங்கும்

பரவவிட்டு சிதறும் மன உணர்வுகளை

ஒருமித்து ஓம்காரத்தை உள்ளே எழச் செய்யும் சிவகுருவின் வாசியே!

 

(69)

ஊறும் சுவையது மாறுமே சிவகுருவின்

வாசியை உள்ளே ஏற்றும்போதே! வாசியால் மாறும்

சுவையதே மாற சுவையது மனிதனுக்கு

ஏற்ற சுவையது என்பதை அறிவாய் மானிடனே இங்கே!

 

(70)

ஊளையிடும் நரியது உறுமும் புலிகண்டு

ஒதுங்கிடுமே அதுபோல வாசியை உணர்ந்தவன்

சொல்லும் வாக்குக்கு ஞானிகள், மகான்கள்

எவர்சொல்லும் அடங்கியே போகும் சிவகுருவின் வாசியை உணர்கையிலே!

 

(71)

ஊரெங்கும் பாரெங்கும் பார்த்திடா பதியதை

வாசியினால் அங்கமதில் அமரவைக்கும் நல்ஆசானே

சிந்தாமணி சிவகுரு சிவசித்தரப்பா! இவர் போலுண்டோ!

இனியும் வருவாரோ! இல்லையே என்பதே உண்மை!

 

(72)

ஊற்றெடுக்கும் நல் உணர்வதே! உற்றவரும்

பெற்றவரும் உணர்த்தா உணர்வதனை

கற்றுவிக்கும் வாசிகலையிலே வழிவகுத்து வாழ்வளிக்கும்

சிந்தாமணியின் மக்களை சீர்படுத்தும் சிவகலையே வாசிகலை!

 

(73)

ஊதிய உடம்பதை நினைத்துப் பெருமை

கொள்ளாதே! உள்ளே உள்ள அத்தனையும்

கழிவே! கழிவதனை வெளிதன்னில் ஏற்றாவிட்டால்

நிச்சயம் உனக்கு அழிவே சிவகுருவின் வளி(வாசி)யாலே!

 

(74)

ஊழ்வினையது ஏதுமில்லை அத்தனையும் நீஉண்ட

உணவாலே வந்த வினையப்பா! வினை என்னும்

பிணியை விரட்ட ஸ்ரீவில்வமதிலே உமைஇணைத்து

இறைவடிவான சிவகுரு சிவசித்தரை உம்உளமேற்றப்பா!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

1 (1599)

(45)

உண்மை உணர்வதனை உடலது உணர

உணர்ந்திடு வாசியின் தன்மையதை உத்தம

சொரூபம் சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின்

வாக்கின் தன்மையறிந்தே வளியறிவாயே!

 

(46)

உலகை இயக்குகின்ற சக்தியது வாசியே

வாசியில் வசிப்பது சிவசித்தியே சிவசக்தியது

உள்ளிருந்து இயக்குவது சிவகுரு சிவசித்தரெனும்

அற்புத மெய்யரையே! அம்மெய்யரின்

மெய்கலையாம் வாசியை அறி! கிட்டிடும் சிவகதியே!

 

(47)

உரித்தாகும் நித்திய சித்தியது கழிவதனை

பிரித்தாளும் தன்மையதை அறிந்து அங்கத்திற்கு

வாசிபுகட்டும் நல்லோரின் நன்னிறை அறிந்து

நற்கலையாம் உயிர்க்கலையைப் புரிபவர்க்கே!

 

(48)

உச்சியிலே ஏறி விளையாடு சிவசித்தியதுவே

சிவகுரு பக்தியிலே சிந்தனையை சிக்கெனவைத்து

வாசிபுரிந்து அவர்திருநாவால் உதிர்த்த

மந்திரங்கள் கூறுகையிலேயே!

 

(49)

உருகும் ஊனதுவே பெருகும் இறையுணர்வதுவே

கருகும் உடல் கழிவதுவே உருவில்லா

வாசியதை உம்உருவில் சிவவடிவாய் வீற்றிருக்கும்

சிந்தாமணி சிவகுரு சிவசித்தரப்பா!

 

(50)

உண்மை உணர்வது உணர்த்தும் உத்தமர்சிவகுரு

என்றே! பித்தர்கள் மத்தியிலே முத்தாய்

தோன்றி வாசியின் மூலம் முக்தியை

நல்குகின்ற மெய்யரே சிந்தாமணி சிவசித்தரப்பா!

 

(51)

உறவும் உதவாது உம்முடன் பிறந்த பிறப்பும்

உதவாது உம்பொறியது பலமிழந்து பரிதவிக்கையிலே

புலன்களுக்கு புத்துணர்வு அளிக்கும் புதுமையே

பொய்யொதுக்கி மெய்யுள்ளே மெய்காணும் சிவகுரு நாதரப்பா!

 

(52)

உலவிவரும் தீயஎண்ணமது விலகிவிடுமே

முன்பழகிவந்த பாழான பழக்கமது தூளாகுமே

குத்தாட்டம் போட்டு வந்த நோயதும்

நொடிப் பொழுதில் நொறுங்குமே வாசியாலே!

 

(53)

உதிரத்தில் உள்ள திறமது கூடுமே

சரீரத்தில் குடிகொண்ட சாக்காடு தீருமே

தீக்காடாய் வெந்த திறமில்லா அணுக்களும்

பூக்காடாய் பூத்து புதுப்பொலிவுறுமே சிவகுருவின் வாசியாலே!

 

(54)

உச்சாணிக் கொம்பிலே உறைந்து தேன்

தரும் சுவை போல! உம்முள்ளே

உறைந்துள்ள கொச்சை பழக்கமதும் இச்சை

செயலதும் பொசுங்கியே மெய்யுள்ளே (இறையொளி) மெய்சுவை

கூடுமே வாசியாலே!

 

(55)

உலகை இயக்கும் ஆற்றல் ஒன்றே

உடலை இயக்கும் ஆற்றலும் ஒன்றே

ஒன்றென்பதை புரிந்து கொண்டு அவ்வொன்று

எங்குண்டென்று எம்ஆசான் சிவகுருவின் மூலம் அறிமனமே!

 

(56)

உடுக்கையதை ஓங்கியடிக்க எழுகின்ற ஒலிபோல

உம்உடலதின் வாசிஎழும்ப இறையொலி

கூடிடுமே! வெறுங்கூடாய் இருந்த உம்உடலது

இறையலவும் வீடாய் மாறுமே சிவகுரு சிவசித்தாராலே!

 

(57)

உம்முள்ளே உறைந்திருக்கும் உயர் ஆற்றலதை

உண்மை உணர்வாலே உரக்கத் தட்டி எழுப்பும்

உயிர் ஆற்றலே! உயிர்க்கலையாம் வாசியே!

வாசியின் ஆற்றலை வழங்கும் ஆற்றலே சிவகுரு சிவசித்தரப்பா!

 

(58)

உதடது பிரியாது உள்உணர்வது சிதறாது

உண்மை மந்திரமாம் உலகிற்கு நன்மை

அளித்திடும் மந்திரமாம் சிவகுரு சிவசித்தர்

அருளிய மந்திரத்தைக் கூறுகையில் கூத்தாடும் இறையுணர்வு

மெய்யுள்ளே!

 

(59)

உத்தரவு போட்ட பின்னே உதிரமதும்

சிலிர்த்திடுமே உன் அணுவும் சத்துறுமே!

உடலுள்ளே வாசி வழங்கிய பின்னே

பொய்மையது பொசுங்கி உண்மையது ஓங்கிடுமே!

 

(60)

உழவாரப் பணியதுவும் உள்ளார்ந்த பணியதுவும்

எதுவென்று பார்க்கையிலே நல்லார்ந்த

எண்ணமதை பொல்லார்க்கும் பொழிந்து

வளியாலே நமக்கு வழிகின்ற (வழங்குகின்ற) சிவகுருவுக்கு செயும்பணியே!

 

(61)

உடலுக்கு உணவது முதலது நீரே

உணவதை உண்ண உண்ண இறைஉணர்வது

அடங்குமே! உண்ண நோன்பிருந்தும் உணர்வது

கிட்டாது! எல்லோருக்கும் இறையுணர்வுகிட்ட எம் ஆசானின் விதியைப் பின்பற்றியே!

 

(62)

உலையது கொதிக்கும் உலையிலிட்ட சோறது

கொதிக்கும். எதனாலே? அடியிலிட்ட நெருப்பாலே!

அச்செயல் போல அங்கத்தில் அடியிலேயே

ஒளிர்கின்ற ஆற்றலை அறியலாம் சிவகுருவின் வாசியாலே!

 

(63)

உனக்குள்ள ஆற்றல் பொதிந்துள்ள இடமதை

உலகை இயக்கும் வாசி மூலம் உமக்கு

உணர்த்தும் இறை ஆற்றலே இயற்கையின்

சொரூபமான நல்லோர் சிவகுரு சிவசித்தரே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

DSC02285

(40)

ஈடில்லா இணையில்லா இறைசக்தியது இயங்குதப்பா

எம் சிவகுரு சிவசித்தனின் உள்ளுள்ளே! அவருள்ளே

இயங்குகின்ற அற்புத சக்தியதை அறிந்துகொள்ள

அறிந்திடப்பா உயிர்க்கலையாம் வாசிகலையதையே!

 

(41)

ஈரமது உள்ள மண்ணிலே விளையும் புல்பூண்டே

இச்செயல் போல வாசிகலையும் செய்யும்

உடலதிலே அணுக்களது புதிதாய் வளரும்

செயலது நடக்குமே சிவகுரு சிவசித்தரின் அருளாலே!

 

(42)

ஈர்க்குமே இறையதனை வாசிகலையதனை

பயில்கையிலே! பகலவன் பாரைக் காக்கும் பணி

போல சிவகுரு சிவசித்தன் நம்மெய்யைக் காக்கும்

மெய்யது மெய்யாக நடந்திடும் உம்மெய்யிலே!

 

(43)

ஈன்ற தாய் பெருமைப்படுவாள் தன்சேய்

பாரோர் முன் நன்னிலையுடன் வாழ்ந்து

பெருமைப்படுகையிலே! இச்செயல் மெய்யாய்

நடந்திடுமே! மெய்யுள்ளே சிவகுரு சிவசித்தரைப் பணிகையிலே!

 

(44)

ஈதல் செய்யும் செய்கையினால் வரும்பெருமையது

கொடுக்கின்ற தருணமதில் உணர்ந்திடலாம்

வாசிகலையதை செய்து மற்றவர்க்கும் பரப்புகையிலே

செத்துப் பிறவா தன்மையதை அடைவாய் மெய்யாய்!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

2 (254)

(32)

இயக்கங்களை இயக்கிடுமே சிந்தாமணியதுவே

உம்பணியது வாசியை அன்றாடம் செய்கையிலே!

சிவகுரு சிவசித்தரின் குருவருளாலும் ஈசனாரின்

இறையருளாலும் கிட்டிடுமே கிட்டாத பேரின்பமதுவே!

 

(33)

இமையது விழியதைக் காப்பது போல

உம் உடலதை உயிர்விட்டுப் பிரியும் காலம்

வரையிலே! பிணியது அண்டாது நற்கதியிலே

உம்கூட்டதனை கூட்டிச் செல்லுமே சிவசித்தரின் வாசியதுவே!

 

(34)

இல்லத்தை ஆளுகின்ற பெண்ணுக்கு இல்லையது

இறையுணர்வாம் சுழிமுனையது என்றதொரு

கூற்றதனை கூறியவர்கள் மத்தியிலே உண்டென்று

உனக்கும் பெண்ணே என்று மெய்ப்பித்தவரே சிவகுரு சிவசித்தர்!

 

(35)

இலகுமே இரும்பதுவே நெருப்பது கூடுகையிலே

இச்செயல்போல உம் உடல் கூட்டினிலே குடி

கொண்டுள்ள மலச்சலக் கழிவதும் இளகி

ஓடிடுமே சிவகுரு சிவசித்தரின் வாசிகலையாலே!

 

(36)

இறப்பென்பது எல்லார்க்கும் வித்திட்ட ஒன்றே!

இறப்பார்க்கு இறப்பின் வலியது தெரியாது

இறக்க வைக்கும் இறைகலையே ஈசனவன்

வையத்திற்கு அளித்த சிவகுருவின் வாசிகலையே!

 

(37)

இறப்பதைக் கண்ட உடலது புண்வைத்து புழுவைத்து

நாற்றமுற்று இறப்பது நல்இறப்பா! உடலது

பண்பட்டு பதியதை உணர்ந்து இறப்பது

நல்இறப்பா! நல் இறப்பை அடைய சிவகுருவின் வாசியை ஏற்று!

 

(38)

இறை வகுத்த வரையிலே வாழ்க்கையதை

வரைவகுத்து வாழ விரும்பும் மானிடனே!

உம்உடலதையும் உள்ளத்தையும் சிவகுரு சிவசித்தரிடம்

திருத்தாழ் சாய்த்து அவர்வகுத்த வாசிகலையை உம்முள்ளே ஏற்றப்பா!

 

(39)

இங்கில்லா இன்பமது எங்குண்டோ எங்குள்ள

இறையதும் இங்குதேடி வந்திடுமே! எங்கில்லா

இறையுணர்வும் இங்கு கிட்டிடுமே இறைகலையாம்

வாசியதை சிவகுரு சிவசித்தரின் அருளாலே உணர்ந்திடுகையிலே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

1 (1600)

(20)

ஆழியிலே அடர்ந்துள்ள உப்பதனை பிரித்தெடுக்கும்

ஆதவனின் செயல்போல அங்கமதில் கழிவதனை

பிரித்தெடுக்கும் ஆதவனே! வாசியோக குரு

சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!

 

(21)

ஆறிரண்டு ஆதாரம் அங்கமதில் உண்டென்று

அவனியிலே வாழ்ந்திட்ட முன்னவர்கள்

கண்டகூற்றதை தாண்டி கூடுதல் ஆதாரம்

உண்டென்று உண்மையை உன்னை உணரவைக்கும் உத்தமரே சிவகுரு சிவசித்தர்!

 

(22)

ஆராய்ந்து உம் அங்கத்திற்கு வாசியளித்து

வாழ்வளிக்கும் சிவகுரு சிவசித்தரை எந்நாளும்

ஆராய்ந்து அணுக்களின் அழிவை நீயாக

தேடாதே! இயற்கையும் சிவகுருவும் ஒன்றப்பா!

 

(23)

ஆகாய சக்தியதை அறிந்து கொள்ள

விஞ்ஞானம் அறியத் தேவையில்லை! அண்டமதிலே

அச்சக்தியதை உம் பிண்டத்தில் அறியவைக்கும்

மெய்ஞானமே! சிவகுரு சிவசித்தனின் வாசியோகமப்பா!

 

(24)

ஆற்றலதை உம் அங்கம் உணர்த்திடுமே

வாசியோகமதை கற்கையிலே! சேற்றில் மலர்ந்த

செந்தாமரை போல வாசிபயிலா மானிடர்கள்

மத்தியிலே வாசிபயிலும் மானிடன் நற்செயல் விளங்குமே!

 

(25)

ஆதியிலே வந்த கலை சிவசோதியிலே

கலந்தகலை தூயவராம் சிவகுரு சிவசித்தர்

மக்களுக்கு அருளி வரும் அற்புதக்கலையே

உயிர்கலைஎனும் வாசியோகக் கலையப்பா!

 

(26)

ஆடி ஆடி அசைந்திடுமே அங்கமது

மந்திரமாம் சிவகுரு சிவசித்தனின் நாமத்தை சொல்லும்

தருணமதிலே! மானிடனே உம் பிண்டமது

எந்நாளும் உணர்ந்திடுமே உணர்வதனையே!

 

(27)

ஆலயம் தேடியும் அடையாத ஆனந்தமதை

ஆழ்அகத்தில் ஒலிக்கச் செய்யும் ஓம்காரஒளியே

சிவகுரு சிவசித்தரப்பா! ஊனை உருக்கி

உள்ளொளி கூட்டும் வாசியோகமப்பா!

 

(28)

ஆதாயம் தேடி அனைவர்க்கும் வாசிதரவில்லை

எம்ஆசான் அதையும் மீறி பதியை உம்அகத்தில்

பதிக்கும் பகலவனே! சிவகுரு சிவசித்தரப்பா!

மாற்றரைப்போல் எண்ணாதே மதுரையம்பதியாரையே!

 

(29)

ஆசையதை அடக்காதே எனும் கூற்றை பலர் கூறுவர்

அவை தானாக அடங்குமே அற்புதக்கலையாம்

வாசிகலையிலே! தானாக அடங்காதே அதுவாகவே

அடங்கும் உயிர்கலையாலே சிவகுரு சிவசித்தராலே!

 

(30)

ஆண்டொன்று செய்திடப்பா அற்புதக்கலையாம்

வாசிகலையை அனைத்து உறுப்புகளும்

தன்னிறைவு அடைந்து நன்முறையில்

அதன் பணியை செய்யுமே சிவகுரு சிவசித்தரின் அருளாலே!

 

(31)

ஆரூடம் பார்த்து வாழ்ந்திட்ட வாழ்க்கையதில்

கிட்டாத ஆனந்தமது அமைதியது உன்னுள்வந்திடுமே

அரூபமான வாசியை அங்கத்தில் சிவகுரு சிவசித்தரின்

அருளால் புகுத்தையிலே எல்லாமும் பொசுங்கிடுமே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

 

 

சிவகுருவே சரணம்!

சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

DSC02287

(01)

அரிச்சுவடு அறிந்தார் எல்லாம் அறிந்தார் ஆகார் நல்ஆசான்

சிவகுரு சிவசித்தரின் இறைகலை வாசிகலை

அறிந்தவரே அனைத்தும் அறிந்ததற்கு

சமமன்றோ அவனியிலே!

 

(02)

அறியாமை இருளைப் போக்கி உடல்நலம்

என்னும் வறுமையைப் போக்கி நல்வாழ்வு

அளிக்கும் வாசியோக செல்வந்தரே

செங்கண்ணன் மருஉருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தர்!

 

(03)

அரூபமாய் அங்கத்தினுள் புகுந்து அனைத்து

உடல்உளக் குறைகளையும் குறைக்கும் குறையா

பெருஞ் செல்வமே சிந்தாமணியரின் சீர்திருத்தும்

உயிர்க்கலையாம் வாசியோகக் கலையே!

 

(04)

அஞ்சுவது பேதைமை எனும் முதுமொழியை

சிவகுரு சிவசித்தரிடம் செயல்படுத்தாதே

அணுக்களின் நிலையறிந்து அவற்றை இயக்குகின்ற

சிவகுரு முன்னே அஞ்சிநடப்பதே உமக்கு நன்றே!

 

(05)

அரிதிலும் அரிதான அருங்கலையாம் வாசிக்கலையை

அவனியோருக்கு உரித்தாக்கி நன்மக்களை

உருவாக்கும் உத்தம சொரூபமே உண்மையின்

உறைவிடமே ஸ்ரீ வில்வ யோகா மையம்!

 

(06)

அங்கப்பிணி தீர்த்து அகத்திற்கும் சுகமளிக்கும்

சூட்சும வொளியான சுந்தரராம் சிவகுரு சிவசித்தர்

முன்னே அற்பப்பணம் கொண்டு அகந்தையுடன்

இருப்பவர்க்கு இக்கலையது உரித்தாகாதே!

 

(07)

அலையதிலே தவழ்ந்து வரும் நுரையது நொடிப்பொழுதில்

மறைவது போல, கள்ளத் தன்மை கொண்ட எண்ணமது

காணாமல் போகுமே! சிவகுரு சிவசித்தரின்

வாசிக்கலை உடம்பினுள் ஏறுகையிலே!

 

(08)

அன்பின் பண்பது அகத்திற்குள் வாருமே

முன்னம் செய்த வினையது ஆதவன்கண்

பட்ட வெண்துளி மறைவது போலப் பண்ணிய

பாவமது பதுங்கி ஓடுமே! சிந்தாமணியர் முன்னே!

 

(09)

அருகது சிறிதாயினும் அடிவேர் பரவும்

தன்மை போல அரூப வாசியதை சிவகுரு

அங்கத்தினுள் புகுத்தி அனைத்துப் பிணிகளுக்கும்

சரியாக்கும் சக்தியே சிவகுரு சிவசித்தர்!

 

(10)

அக்னியின் சொரூபமாய் அங்கத்தில்

சுழிமுனை உணர்வை சுடர்விடும் சூட்சும

தாரியே! பிணிகளை சுட்டெரிக்கும் வாசியோக

சிவகுரு சிவசித்தரப்பா!

 

(11)

அந்தி சந்தி வேளையிலே அற்புதக் கலையது

அகிலத்தைக் காக்கும் கலையது வாசிகலையை

சிவகுரு சிவசித்தர் அருளோடு அவர் விழிமுன்

கற்பவருக்கு காணாமல் போகுமே கவலையதுவே!

 

(12)

அங்குல நாவதனை அடக்கினாலே அவனியோர்க்கு

துயரில்லை! உண்பதிலும், உரைப்பதிலும்

நாவதனை கட்டுண்டு வைக்க உதவும்

கருவியே சிவகுரு சிவசித்தரின் வாசியோகமே!

 

(13)

அணையாது விளக்கின் சுடரொளிர அதனுள்

நெய் இருப்பது போல உம் உள்ளொளி

கூட மெய்யுள் வாசியதை சிவகுரு சிவசித்தரால்

புகுத்த வேண்டுமே மெய்யுணர்வுடனே!

 

(14)

அள்ள அள்ளக் குறையாத செல்வமது

எதுவன்றோ! வையகத்தை வாழ்விக்கும்

சிவகுருவின் வாசியோகக் கலையதுவே

எந்நாளும் குறையாத நற்செல்வமே!

 

(15)

அச்சாணி இல்லாத வண்டியது எந்நேரமும்

சரிந்துவிழும் செயல்போல! வாசிகலைபயிலா

அங்கமது பிணி எனும் சரிவைக் கண்டிடுமே

எந்நேரமுமே! இக்கூற்றை சிந்தியப்பா உம் சிந்தையிலே!

 

(16)

அனைத்துலக மானிடர்க்கும் அங்கப் பாதுகாப்பு

வளையமன்றோ வாசியோகம் இவ்வளையமதுள்

வந்தவர்க்கு வாழ்வது பொலிவுறுமே இதைசிரமமாய்

எண்ணாதே! இறைதந்த வரமாய் நினைமனமே!

 

(17)

அணுவின் நுட்பமறிந்து அணுவுக்கு அணுவாகி

அணுவுக்கு வாழ்வளித்து அங்கத்தை பொலிவாக்கும்

மண்ணுலகப் பொன்னரே! தென்னகத்தில் குடிகொண்டு

சுபிட்சம் அளித்துவரும் எம்ஆசான் சிவகுரு சிவசித்தர்!

 

(18)

அண்ட சராசரமும் வந்து பணிந்திடுமே

பிணியிலா வாழ்வளிக்கும் சிவகுருவின் திருப்பதத்தை

கண்டமாத்திரத்தில் காணாமல் போகிடுமே

கவலையுண்ட உடல்உள்ள மதுவுமே!

 

(19)

அஞ்சி நடுங்கிடுமே தீயசக்தியது இவரை

மிஞ்சி நடக்காது தீதுவே! இவரருளிய

மந்திரத்தைக் கூறும் மானிடர்க்கு கிட்டிடுமே

முத்தான வாழ்வதுவே! முறையான வாழ்வதுவே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

பக்தர்களின் தனி உணர்வுகள்

சிவசித்தனின் பக்தர்கள், பக்த்தைகள் தங்கள் அனுபவகளையும், உணர்வுகளையும், கருத்துக்களையும் குறிப்பாகவும், பாடலாகவும் பகிரும் பகுதி .

12 Dec

Sivasithavaasithegakannan | 042

206. Let us all #surrender to #Mega_Master #Sivasithan and #dedicate our self to him. Sivasithan will #protect_us from all #sides. 207. Allow #Mega_Master #Sivasithan to #createHe will make you to #love your http://self.you will #find your #True_value. 208. By learning #Mega_Master #Sivasithans art all our #body, #mind and #soul are …

12 Dec

சிவசித்தவாசிதேகக்கண்ணன் | 041

201. #Mega_Master #Sivasithan by his #Sevanapirapanchakalai is teaching the mankind to #praise and #celebrate their #own_life. 202. #Mega_Master #Sivasithan by his #Sevanapirapanchakalai is giving us all the #ability to do #Good_things. 203. #Forgive and #forget the #sins of others as taught by #Mega_Master #Sivasithan and #stand with him then #Maya will get #disappointed. …

11 Dec

Sivasithavaasithegakannan | 040

196. #வீட்டை #உயர்த்த வேண்டியது #பெண்ணின் #கடமை. #சிவசித்தன். 197. இதுவரை செய்த #பாவத்தை #தொலைக்க #ஒரே_வழி #சிவசித்தனுக்கு #கிழ்படிந்து_நடப்பதே. 198. என் மீதும் கருணைகொண்டு #சிவசித்தன் #கிழங்கு திங்க கற்றுக் கொடுத்தான். #மலம் #பாவத்தை தின்னும் ஆசையால் சிவசித்தனை #விலக்கிவிட்டேன். 199. எனக்கு #மலம்_தின்னும் #பன்றியின்_வாழ்வு தான் பிடித்து இருக்கிறது. எனக்கு #சிவசித்தனை #பிடிக்காமல் போனதில் #வியப்பு ஒன்றும் இல்லை. 200. Any #relationship that #pulls away from …

சிவசித்தன் அனைத்துக்கும் மேலானவன்

உணவே கழிவு என்று கேட்டது உண்டா?

சிவசித்தனே, உணவே கழிவு என்ற உண்மையை உணர்த்தி.
அளவான  இரு வேலை உணவோடு நோயின்றி வாழவைக்கிறார்!

நோய் இல்லாமல் வாழ வைத்தார்களா?

சிவசித்தன், நோய் இன்றியும், நோய் என்ற பயம் இல்ல வாழ்வை தந்து அருளியுள்ளார்.

உடல் வெப்பம், குளிச்சி சமநிலையில் வைக்கும் நிலையை தந்துள்ளனரா?

சிவசித்தனே, உடலில் வெப்பம், குளிர்ச்சி நிலைகளை உணர்த்தி, உடலை பாதுகாக்க வழிகளையும் தந்துள்ளார்.

நோய் என்ற ஒன்றே இல்லை என்று யாரும் சொன்னது உண்டா ?

சிவசித்தன் ஒருவனே, நோய் என்ற ஒன்றே இல்லை என்றும்  மனித செயல்காளால் உடல் கழிவை சேர்த்து, இயற்கை செயலை தடுத்துள்ள்ளனர் என்றார்!

மலம், சலமே உடல் துன்பத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்களா ?

சிவசித்தனே, உடல் கழிவுகளை உண்மையாக வெளியேற்றி, தேகமாய் மாற்றி. எலும்பில் தோல் போற்றிய தேகத்தை தந்து வாழ வைக்கிறார்.

உணவில் சத்து இல்லை, ஆன்மாவே சத்து என்று கூறியுள்ளனரா ?

சிவசித்தன், ஒருவனே ஒரு மனித வாழ்வதற்கு சத்து உணவில் இல்லை, ஆன்மாவில் உண்டு என்று கூறி நிருபித்து உள்ளார்.

ஸ்ரீ வில்வம் யோகா மையம்

சிவகுரு சிவசித்தன் கழிவுகொண்ட மனிதர்களை ஏற்று, அவர்களுக்கு நாடிபார்த்து, வாசியோகப் பயிற்சிகள் கற்றுக் கொடுத்து, உடலில் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற உணவு முறைகளும், விதிமுறைகளும் வகுத்து நலமுடன் வாழ வழிகாட்டுகிறார்.

மேலும் தகவலுக்கு